பக்கம்:கல்வி நிலை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. க ல் வி 51

உணவு எவ்வாறு உடலுக்கு உறுகியாய் அமைக்கிருக் மனோ அவ்வாறே கல்வி உயிருக்கு அவசிய உரிமையாய் அமைந்துள்ளது. உணவு இல்லையானுல் கிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்தல் முதலிய தொழில்களை உடல் செய்யமாட் டாது; அதுபோலவே கல்வி இல்லை ஆனல் நன்மை தீமை களை நாடி அறிய மாட்டாமல் மென்மையா யிழிந்து மேன்

மை குலைந்து உயிர் புன்மையாய்ப் புலர்ந்து கவிக்கும்.

பறவைக்குச் சிறகுகள்போல் மனிதனுக்குக் கல்வி யறிவு உறுதி புரிந்துள்ளது; அகனே யுடையவன் எங்கும் அணிந்து செல்கின்றன். எங்த நாடும் அவனுக்குச் சொந்த காடாய் வந்தனே புரிகிறது; வழிபாடுகள் செய்கின்றது.

கல்வியறிவில்லாதவன் சிறகிழந்த பறவைபோல் வலி யிழந்து பிறந்த இடத்திலேயே யிருந்து மடிகின்ருன். கல்வி வில்லை யானுல் கண் இருந்தும் குருடனுப்க், காகிருந்தும் செவிடனும், உயிர் இருந்தும் சடமாய் மனிதன் இழிந்து படுவதை அனுபவத்தில் நேரே அறிந்து பரிந்து வருகிருேம்.

உணர்வை ஒளிசெய்து உள்ளத்தைத் தெளிவாக்கி எல் லா வகைளிலும் மனிதனை வல்லவன் ஆக்கிக் கல்வி மாண் புறக்கி வருதலால் அதனைப் பெற்றவன் பெரிய பாக்கியவா குப் அரிய மகிமைகள் யாவும் ஒருங்கே அடைகின்றன்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை. (குறள் 400)

கனக்கு இனிய உரிமையாக மனிதன் ஈட்டிக்கொள்ள வேண்டிய அரிய பெரிய செல்வம் கல்வியே என வள்ளு வப் பெருக்ககை இங்கனம் உள்ளம் உவந்து உரைத்திருக் _மூர். அடைமொழிகள் உயர்ந்த பெற்றிகளை உணர்த்தின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/57&oldid=551983" இலிருந்து மீள்விக்கப்பட்டது