பக்கம்:கல்வி நிலை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கல்வி நிலை

அழிவு இன்மையும் விழுமிய தன்மையும் வேறு செல் வங்களுக்கு இல்லை ஆதலால் அந்த அதிசய நீர்மைகளைச் தனி உரிமையாக உடைய கல்வியின் மகிமையும் மாண்பும் தலைமையும் நிலைமையும் இங்கே இனிது தெளிய வந்தன.

மணி பொன் நிலம் முதலிய பொருள்களையே உலகம் செல்வம் ஆகக் கருதி வருகிறது; அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளும்படி உண்மைச் செல்வத்தை ஈண்டு உணர்த்தி யருளி னர். உண்மையை ஊன்றி உணர்த்து கொள் விவும்.

அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே; அதனை முத வில் உரிமையோடு ஈட்டிக்கொள்! அதன் வழியே விழுமிய கலங்கள் யாவும் எளிதே விளைந்து இன்பங்கள் சுரங்து வரும் என்பது இங்கே நன்கு தெரிந்து கொள்ள வந்தது.

கல்வியும் செல்வமும் மனிதனுக்கு அவசிய உரிமைக ளாய் அமைந்திருக்கின்றன. இருப்பினும் இரண்டுக்கும் இடையே வேறுபாடுகளும் மாறுபாடுகளும் பல உள்ளன.

கல்வி உயிர் போல்வது.

செல்வம் உடல் போல்வது.

அது அழியாத நிலையது. இது அழிந்து கழிவது. அது அறிவின் சுவைகளை அருள்வது. இது பொறிவெறிகளைத் தருவது. இன்னவாறு நிலையிலும் நீர்மையிலும் உறவிலும் உறுதியி அம் வாவிலும் செலவிலும் பல பிளவுகள் தோய்ந்துள்ளன. கல்வி உள்ளேயிருந்து விளைவது; ஆன்ம ஒளியாயுள்ளது; அமுத மயமானது; அடுத்தவர்க்கு அருள்வது; கொடுக்கக் கொடுக்கக் குறையாதது; எடுக்குக் தோறும் பெருகுவது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/58&oldid=551984" இலிருந்து மீள்விக்கப்பட்டது