பக்கம்:கல்வி நிலை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கல்வி நி 2ல

பொய்க்கும் பொருள் அன்றி நீடும்

பொருள் அல்ல; பூத லத்தில் மெய்க்கும் பொருளும் அழியாப்

பொருளும் விழுப்பொருளும் உய்க்கும் பொருளும் கலைமான்

உணர்த்தும் உரைப்பொருளே. (சரசுவதி அந்தாதி) வைப்புழிக் கோட்படா; வாய்த்தியின் கேடில்லை; மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்; எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற்று அல்ல பிற. (நாலடியார்) வெள்ளத்தால் அழியாது; வெந்த ழலால்

வேகாது; வேந்தராலும் கொள்ளத்தான் இயலாது; கொடுத்தாலும்

குறையாது; கொடிய தீய கள்ளத்தார் எவராலும் களவாட

முடியாது; கல்வி என்னும் உள்ளத்தே பொருள் இருக்க உலகெங்கும

பொருள்தேடி உழல்வது என்னே?

(விவேக சிந்தாமணி) கல்வி அழியாத விழுமிய செல்வம் என்பதை இவை. காட்டியுள்ளன. காட்சிகளைக் க ண் ஊன்றி நோக்கின் கருத்துக்களை நன்கு உணர்ந்து நயம்தெரிந்துகொள்ளலாம். கல்வி என்னும் சொல்லே அது மனிதனுக்கு உரியது. என்பதை இனிது உணர்த்திகின்றது. கல்லுதல், கிளைத்தல், தோண்டுதல், துருவுதல் என்னும் வினைக்குறிப்புகளால் கல்வி என்னும் பேர்காரணங்களோடுவிளைந்து வந்துள்ளது.

மனிதனிடம் H இயல்பாக அமைந்துள்ள அறிவைக் கிளைத்து வளர்த்து விருத்தி ஆக்கிக்கொள்ளின் அது கல்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/60&oldid=551986" இலிருந்து மீள்விக்கப்பட்டது