பக்கம்:கல்வி நிலை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. க ல் வி 61

கல்லாக மனிதனுடைய இயற்கை அறிவு கட்டுக் கடை ரோய் மட்டுப் பட்டுள்ளது; கல்வியறிவு கலந்தால் ஊற்று ரோய் அது ஒங்கி எழுகின்றது. ஒளியும் சுவையும் பெருகி எவ்வழியும் விழுமிய நிலையில் அது விளங்கி வருகின்றது.

எண்ணங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உயர்கின்ற னவோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்த மனிதன் உயர்கின் முன். உயர்ச்சி நிலை ஊன்றிய உள்ளப் பயிற்சியால் அமை கின்றது. நல்ல சிந்தனைகளால் மனிதன் உயர்ந்து கலம் பல பெறுகிருன். மேலோர்களுடைய உயர்ந்த எண்ணங்களே சிறந்த நூல்களாய் வந்துள்ளமையால் அவற்ருேடு பழகி

வரின் விழுமிய மேன்மைகள் எங்கும் பெருகி வருகின்றன.

கல்வி மனிதனை ஒளி நிறைந்த உயர்ந்த மணி ஆக உயர்த்தியருளுகிறது; கல்லாமை அவனை இழிந்த கல்லாகத் தாழ்த்தி யாண்டும் பொல்லாங்கை விளைத்து விடுகின்றது.

கல்லாதான் கல்லாய்க் கழிந்திழிந்தான்; கற்றவனே எல்லொளி வீசி எழில்மிகுந்து--- நல்ல மணியாய் உயர்ந்தான்; மதிகெட்டு நின்ருன் பிணியாய் இழிந்தான் பிறழ்ந்து.

i.

கல்வி கல்லாமைகளால் மனிதர் அடையும் உயர்வுகாழ் வுகளை இது உணர்த்தி யுளது. கற்றவன் நல்ல ஒளி மணி: கல்லாதவன் பொல்லாத கல் என்றது நிலைமைகளை நினைக்து தெளிய வந்தது. உள்ளே நல்ல அறிவு பெருகியதால் கல்விமான்வெளியே மதிப்பாய் ஒளிமிகப் பெற்ருன்.அறிவு _அருகிப் பேர்னமையால் கல்லாதவன் சிறுமையாய் மறுகி யிழிந்தான். உயிர் ஒளி மழுங்கினமையால் உயர்வு ஒழிய நேர்ந்தது.கல்வியை இழந்தபோது அல்லல்கள் அடர்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/67&oldid=551993" இலிருந்து மீள்விக்கப்பட்டது