பக்கம்:கல்வி நிலை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கல்வி கி 2ல

ஒரு இளைஞன் அகி விரைவில் எதையும் விழைந்தன அறிந்து கொள்கிருன்; மற்ருெரு பையன் யாதும் எருமல் மந்தனய் மடிந்து நிற்கின்ருன். அ என்னும் ஒரு எழுத்தை அறிந்து கொள்ளவே இவனுக்கு ஆறுமாதங்கள் ஆகின்றன. காரணம் என்ன? முன்னவன் முன்னமே படித்து வந்த வாச னே யுடையவன்; பின் னவன் படியாமல் முடமாய் நின்ற வன். ஆகவே அந்தத் தொடர்பும் நிலையும் தொடர்ந்து வக் அள்ளன. பிறவிவாசனைகள் என்றும் உறவுரிமையுடையன.

விட்ட குறை; தொட்ட குறை எனச் சுட்டி வரும்பழ. மொழிகள் இந் நிலைமைகளை விழிதெரிய விளக்கி புள்ளன.

ஒரு முறை கற்றது பின்பு அவனுக்கு உரமாய் உறுதி

கலங்களை உதவி வருதலால் கல்வி என்றும் எவ்வழியும் அழியாத விழுமிய துணை என வியந்து புகழ வந்தது.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. (குறள். 398)

ஒரு பிறப்பில் ஒருவன் கற்ற கல்வி ஏழு பிறவிகளிலும் தொடர்ந்து அவனுக்குச் சேமமாய் இன்ப நலங்களை அருளி' வரும் என வள்ளுவ தேவர் இங்கனம் குறித்துள்ளார். ஏழு என்று வரம்பு செய்து உரைத்தது உயிர் வாசனையின் எல்லையை நோக்கி வந்தது; ஆயினும் எல்லையில்லாத நிலையில் கல்வி உரிமையாய் உறுதி புரிந்து வரும் என்பது மருமமாய் மருவி நின்றது. யாண்டும் அழியாதது ஈண்டுஅறிய வந்தது.

இத்தகைய அற்புதத் திருவை இழந்திருப்பின் மனித

அக்கு அது எத்தகைய இழிவாம் எவ்வளவு பழியாம்: எத்துணைக் கேடாம் இதனை நன்கு உய்த்துணர வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/70&oldid=551996" இலிருந்து மீள்விக்கப்பட்டது