பக்கம்:கல்வி நிலை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. க ல் வி 69.

இப்பொருள் எய்தி நின்றிர்!

இரங்குவது என்ன? என்ருன்.

(சீவகசிந்தாமணி) கல்வியினல் உண்டாகிற பலவகை நன்மைகளையும் எடுத்து விளக்கிச் சீவக மன்னன் இவ்வாறு உரைத்திருக் முன். கல்வி நிலையை அவன் கருதி யிருப்பது காண வந்தது.

குடிசனங்கள் யாவரும் கற்றவர்களா யிருந்தால் நாடு சிறந்து விளங்கும்; தங்கள் ஆட்சியும் அமைதியாய் இனிது கடைபெறும்; ஆதலால் அ ச ரீ க ள் யாண்டும் கல்வியை இவ்வண்ணம் விழைந்து பேணிப் புகழ்ந்து போற்றி எல்

லாரிடையும் நல்ல அறிவை நன்கு பாப்பி வந்துள்ளனர்.

கல்லாத மக்களை யுடைய நாடுகள் பொல்லாத காடுக ளாய்ப் புன்மை அடைந்திருக்கும் ஆதலால் நாடு ஆளநேர்க் தவர் எவரும் தம் குடிகளிடம் கல்வியைப் பல வகையிலும் -பாப்பி நன்மை செய்ய நேர்ந்தனர். சிறந்த ஆட்சிக்கு அடை யாளம் அங்காட்டு மக்கள் எல்லாரும் கற்றவராயிருக்கும் காட்சியே யாம். அது குறையின் யாவும் குறையே.

கன்பால் வாழும் மக்கள் யாவரும் கல்விமான்களாய்ச் சிறந்து பண்பாடு அமைந்திருப்பின் அந்த நாடு இன்ப நிலை யமாய் எங்கும் நன்கு மதிக்கப்படுகிறது. தற்காலத்தில் கமது நாடு கல்வியில் மிகவும் தாழ்ந்து தளர்ந்திருக்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், பிரான்ஸ், ஜப் பான், ரஷ்யா முதலிய தேசங்களில் நூற்றுக்குத் தொண் அாற்று நான்குபேர் நன்கு படித்திருக்கின்றனர். ஞான பூமி என்று பெருமை பெற்றுள்ள நம் இந்தியாவில் நூற். அறுக்குப் பதினைந்து பேரே படித்துள்ளனர். மற்றை எண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/75&oldid=552001" இலிருந்து மீள்விக்கப்பட்டது