பக்கம்:கல்வி நிலை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. க ல் வி. 73

கல்வி கற்கும் முறையையும், அங்கனம் கற்றவன் ஒழுகி வரவேண்டிய நிலையையும் தேவர் இங்கனம் உணர்த் தியிருக்கிருர். கல், நில் என் ஏவலால் குறியாமல் வியங் கோள் மொழியால் மரியாதையாக உரைத்தது மதித்து உணர வுரியது. கல்வியைத் தொடங்கும் போதே மனிதன் கல்ல மதிப்பு அடையத் தொடங்கிக் கொள்கிருன். கண் அனைய கல்வியைப் பெற விரும்பிய பொழுதே எண்ணரிய

செல்வங்களை எய்திக் கண்ணிய வானுய் உயர்கின்ருன்.

பல நூல்களையும் தெளிவாகக் கற்று மனிதன் சீலம் உடையய்ை ஒழுகி வரவேண்டும். அவ்வாறு வரின் அவன் விழுமிய மேன்மையாளனுய் உயர்ந்து மேலான கதிகலங் களை அடைய கேர்கின்ருன். கல்வியால் உள்ளம் ஒளிபெறு கிறது; உணர்வு பெருகி வருகிறது; வரவே அளவிடலரிய மேன்மைகள் அதனுல் வெள்ளமாய் விளைந்து வருகின்றன.

கல்வி இன்னவாறு கலம் பல புரிந்து வருதலால் அது தெய்வ நிதி; சிவ அமுதம்; உயிர்த்துணே எனப் புகழ்ந்து போற்றப் பெற்றது. செம்மையும் சீர்மையும் பயந்து இம் மையும் ம அமையும் இன்புறுக்கியருளும் கல்வியை ஒருவன் எவ்வளவு அன்புரிமையோடு விரைந்து பெறவேண்டும்! என்பதை ஈண்டு நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்ருல் தம்மை விளக்குமால் தாம் உண்ராக் கேடின்ருல் எம்மை உலகத்தும் யாம்கானேம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து. (நாலடியார், 132) அறம்பொருள் இன்பமும் விடும் பயக்கும் புறங்கடை நல்லிசையும் நாட்டும்---உறுங்கவலொன்று உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லை

ల్యాల ఒలి అడి. (శ95లో, 2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/79&oldid=552005" இலிருந்து மீள்விக்கப்பட்டது