பக்கம்:கல்வி நிலை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கல்வி கிலே

செயலில் உயர்வடைந்த போதுதான் கல்வி பயனுடை

யதாகின்றது. மனத்தைப் பண்படுத்தித் தன் வாழ்க்கையை

மாண்பு செய்து வருபவனே மேன்மையான கல்விமானுகின்

முன். பூாண மனிதன் ஆதற்குக் கல்வி காரணமா புள்ளது. பெண் கல்வி.

ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி பெரு, மகிமை தருகின்றது. பெண் கல்வி இங்காட்டில் பண்டு. உயர்ந்த நிலையில் சிறந்து வந்துளது. கலையில் பயிற்சியும் அங் நிலையில் உயர்ச்சியும் அவர்களிடம் ஒருங்கே அமைந்து வாழ்க்கையைப் பெருந்தகைமையா ஆக்கி யிருக்கின்றன.

பெருந்தடங்கட் பிறைநுத லார்க் கெலாம்

பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்

வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே?

(இராமா, நாட்டு, 36) கோசலா தேசத்துப் பெண்களிடம் கல்வியும் செல்வ

மும் நிறைந்திருந்த நிலையும், அவர்வாழ்க்கையை நடத்திவந்த வகையும் இப்பாட்டில் காட்டப்பட்டுள்ளன. கல்வியறிவும் செல்வ் வளமும் செறிந்து இருந்தமையால் வருங்கி வந்தவர் எவர்க்கும் கிருந்திய அன்போடு அன்னம் அளித்துப்பெருங். தகவோடு பொருளுதவி புரிந்து அருள் அறங்களைப் பேணிச் சிறந்த நிலையில் அவர்உவந்து வாழ்ந்து வந்துள்ளனர்.தம்மை உரிமையாக வுடையவரை மகிமைப் படுத்தி மணம் பெறச் செய்து புகழ் வாசனையை எங்கும் பரப்பி இன்பக் காட்சி யாய் இனிது மலர்ந்திருந்தன ஆதலால் கல்வியும் செல்வமும், பூத்தன என்று புதுமை தோன்ற வுரைத்தார். கல்வி கற்ப அதும், செல்வம் பெறுவதும் எதற்காக காம் கல்லவாாய்: உயர்ந்து பிறர்க்கு கலம் பல புரியவே என்பதை அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/84&oldid=552010" இலிருந்து மீள்விக்கப்பட்டது