பக்கம்:கல்வி நிலை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கல்வி கி 2ல

உயர்த்த வேண்டும்; அந்த உயர்வைச் செய்த போதுதான் அது நல்ல கல்வி ஆகின்றது.கற்றவனும் பெற்றவனுகிருன். The poorest education that teaches self-control, is better than the best that neglects it. [Anon] மனஅடக்கத்தைத்தாாத உயர்ந்த கல்வியினும்அதனை அருளி உள்ளத்தைப் பண்படுத்துவதே சிறிதாயிருந்தாலும்பெரிய சிறந்த கல்வியாம் என்னும்இது இங்கு நன்குஅறியவுரியது. கல்வியால் மேலான அறிவு கலங்களை மனிதன் அடை கின்ருன்; அதனுல் உரிமையோடு அறிய வேண்டியதை அறிந்து பெரிய பேரின்ப நிலையைப் பெறுகின்ருன்.

கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்று ஈண்டு வாரா நெறி. (குறள்,356). பிறவி நீங்கிப் பேரின்ப நிலையைப் பெறுவதே கல்வி யின் முடிவான பயன் எனத் தேவர் இங்கனம் முடித்திருக் கிருர். பிறவி எவ்வளவு உயர் வுடையதாயினும் எவ்வழியும் அது துயருடையதே; அதனை நீங்கித் தனது உண்மை நிலை யை அடைந்து கொள்வதே ஒருவன் உய்தி பெற்றபடியாம். அப்பேற்றைப் பெறுதற்குக் கல்வி பெருந்துணையாயுள்ளது. உயிர் துயர் நீங்கி உயர்வா உய்ய உதவுவது உனா வந்தது.

கல்வி என்ருல் என்ன? செல்வத்தினும் அது எதல்ை சிறந்தது? மனிதனுக்கும் அதற்கும் உள்ள உறவுரிமையாது? அதனைப் பயின்று பெறவேண்டிய முறைகள் எவை? அதன் முடிவான பயன் எது?

இந்த விளுக்களுக்கு உரிய விடைகளை ஈண்டு மீண்டும். ாய்ந்து ஒர்ந்து சிந்தனைசெய்துகொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/86&oldid=552012" இலிருந்து மீள்விக்கப்பட்டது