பக்கம்:கல்வி நிலை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அறிவு 3

தேக முயற்சி ஆவது உணர்வுகலம் புணராமல் உட லளவில் உழைப்பது. கடுமையாகப் பாடுபடுவதால் இது

மாட்டுப் பாடு என நேர்ந்து பலனும் மட்டாய் வந்தது.

மனமுயற்சி ஆவது கொஞ்சம் சிந்தனையோடு செய் வது. நெசவு வாணிகம் முதலியன இதனுள் அடங்கும்.

அறிவு முயற்சி என்பது கலையறிவோடு கலந்து புரிவது. மந்திராலோசனை, நியாயவாதம், கிே தெளிதல், ஒவியம் புனைதல், காவியம் வரைதல் முதலியன இதில் மருவி வரு கின்றன. மகிநலம் வாய்ந்தது அதிகபமாய் விதியே வந்தது.

ஆன்மமுயற்சி என்பது ஞானசிலம் தோய்ந்தது. அரிய தவம் முதலிய பெரிய நிலைகள் இதில் பெருகி எழுகின்றன.

குறித்த நான்கும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது.

ஒருநாள் முழுவதும் உழைக்கும் தேக முயற்சிக்கு ஒரு பொன் கூலி ஆல்ை அதே அளவுள்ள மன முயற்சிக் குப் பத்துப் பொன். அறிவு முயற்சிக்கு தாறு பொன்; ஆன்ம முயற்சிக்கு ஆயிரம் பொன். முயற்சியின் வகை அளவே உயர்ச்சியும் பயனும் உளவாகின்றன. எங்த எந்த நிலையில் நின்று முயல்கின்ருனே அங்த அந்த வகையிலேயே உலகிற்கு அவன் பயன்படுகிருன். இனவுரிமைகளைத் தழு விச் சமுதாயங்கள் முறையே இனிது இயங்கி வருகின்றன.

உடல் உழைப்பால் விளைகின்றன. உடல்களை வளர்க்க உதவுகின்றன. அதற்கு மேலே புள்ள அறிவின் பசிக்கும் சுவைக்கும் அவை உதவாது போகின்றன. நிலைமைகளின் அளவாய் நீர்மையும் சீர்மையும் நேர்ந்து கிற்கின்றன. தலை மையான அறிவால் உலகம் பலவகை கலங்களை யடைந்து வருகிறது. அறிவின் பலன்கள் வாழ்வின் வளங்களாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/9&oldid=551935" இலிருந்து மீள்விக்கப்பட்டது