பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வெட்டில் தேவார மூவர்

13


பகுதியிலும் வாழ்ந்தவன். இவன் தில்லையிலும் திருவதிகையிலும் செய்த திருப்பணிகள் பல. அவை தில்லையில் 31 வடமொழிச் சுலோகங்களிலும்,4 36 தமிழ் வெண்பாக்களிலும்,5 திருவதிகையில் 25 வெண்பாக்களிலும்6 அமைந்துள்ளன.

இவன் தில்லையில் தேவாரம் ஓதுவதற்கும். இருந்து அன்பர்கள் செவிமடுத்து இன்புறுவதற்கும் ஆக ஒரு மண்டபத்தைச் செய்தான்.

“நட்டப் பெருமானார் ஞானம குழைத்தளித்த
சிட்டப் பெருமான் திருப்பதியம் - முட்டாமைக்
கேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான்தெவ் வேந்தர்கெட
வாட்போக்கும் தொண்டையர்கோன் மன்”

என்பது அவ்வெண்பா. இதில், “ஞானம் குழைத்து அளித்த சிட்டப் பெருமான்” என்ற பகுதியில், சம்பந்தர்க்கு இறைவன் ஏவலால் சிவஞானப்பால் கொடுக்கப்பெற்ற செய்தி குறிக்கப்பெற்றது.

தாளம் பெற்றமை

ஈசன், “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளன்” என்பர் சுந்தரர்.7 சம்பந்தர், திருக்கோலக்காவில் தாளம் பெற்ற செய்தியை, நினைப்பூட்டும் நெறியில் முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியனுடைய குடுமியான் மலைக் கல்வெட்டில், ‘தாளம் பெற்றான் குடிக்காடு’8 என்று ஒரு நிலப் பகுதி குறிக்கப் பெற்றுள்ளது.

ஆணை நமதே9

திருஞானசம்பந்தரது முதலாவது தல யாத்திரை, திருக்கோலக்காவுக்குச் சென்றது. இரண்டாவது தலயாத்திரை,