பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

பையர வல்குலான்

திருவிற்கோலம் என்பது தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்று. இது கூவம் என்று இந்நாளில் வழங்குகிறது. இங்குத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகத்தின் மூன்றாம் பாடல்,

"ஐயன்நல் லதிசயன் அயன் விண்ணோர் தொழும்

மையணி கண்டனார் வண்ணம் வண்ணவான்

பையர வல்குலாள் பாகம் ஆகவும் செய்யவன் உறைவிடம் திருவிற்கோலமே'

என்பதாகும். இப்பாடலில் இறைவி, பையரவல்குலாள் என்று குறிக்கப் பெறுகிறாள். திருக்கூவப் புராணத்தில் வாழ்த்துச் செய்யுளில்,

"எழிலுடை பையரவல்குலம்மை பதம் வணக்கம் செய்வாம்" என்ற பாடற் பகுதியில் இத்தொடர் பயின்றுள்ளது. செந்நெல் வைத்த சருக்கத்தில்,

"பொருவில் தன்னை விற்கோலத்தன் எனும்பெயர்புதுக்க

உருவம் முன் வளைத்து ஒரு கழைத் தண்டுமுன் ஊன்றித் திருவிறைஞ்சு பொற் பையரவல்குலாள் சிரிப்பத் தரும சீலர் தம் மனையிடைப் புகுந்தனன் தலைவன்' என்னும் பாடலிலும் இத்தொடர் பயின்றுள்ளமையைக் காணலாம்.

1912இல் 30ஆவது எண்ணாகப் படி எடுக்கப் பெற்ற கல்வெட்டில், பையரவல் குலம்மைக்கு வெள்ளிக்கிழமை வழிபாடற்ற விற்கோலம் ஊரவர் நிவந்தம் அளித்ததாகச் சொல்லப் பெற்றுள்ளது.

தனி நின்று வென்றான்

விக்கிரம சோழனின் ஐந்தாமாண்டுக் கல்வெட்டு திரு வெண்காடுடையார் கோயில் சுற்றுத் தெருவில் 'தனினின்று