பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

காணியாகத் தரப்பெற்றன என்று ஒரு கல்வெட்டு விவரிக்கின்றது." 'இனிப் போஜனம் உள்ளிட்டு வேண்டுவனவற்றுக்கு நிலம் ஒருவேலியும் எட்டுமா கோமாறவர்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டியரது ஆட்சியாண்டு பதினைந்தாவது முதல் திருஞானப்புற இறையிலியாகத் தரப்பெற்றது' என்று இன்னொரு சிலைமேல் எழுத்து செப்புகின்றது."

திருச்செந்தூர் வட்டம் ஆற்றுார்க் கல்வெட்டில் திருஞானம் ஒதுவதற்குத் திரிபுவனச்சக்கரவர்த்தி கோநேரின்மை கொண்டான் காலத்தில் நிவந்தம் கொடுக்கப்பெற்றது என்று படிக்கிறோம். இக்கல்வெட்டுக்குரிய அரசன் 1239இல் பட்டம்பெற்ற மாறவர்மன் சுந்தரபாண்டியன் ll என்றும். விக்கிரம சோழதேவர் என்பார் கொங்குச் சோழர் என்றும் இச்சுந்தரபாண்டியர்க்கு மச்சுனனார் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர்."

திருஞானம் என்பது தேவாரம் போலச் சமய குரவருள் ஒருவரால் அருளப் பெற்ற பக்தி நூலாக இருத்தல் கூடும் என்று ஆராய்ச்சியாளர் கருதுவர்". எனினும் சம்பந்தராதிய மூவர்பாடிய தேவாரத்தையே திருஞானம் என்பது குறிக்கும் எனக் கொள்ளுதல் தகும். சீகாழிப் பகுதியில் இறைவியாரளித்த பாலடிசில் உண்டு,

'சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்

பவமதனை அறமாக்கும் பாங்கினிலோங்கிய ஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்"

என்று சேக்கிழார் பகர்வர். இதனால், ஞானசம்பந்தர் தேவாரத்தையே திருஞானம் என்று குறித்தனரோ என்று ஐயம்

எழும.