பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 39

காக்கு நாயகன்

"மூக்கு வாய் செவி கண்ணுடல் ஆகிவந்து ஆக்கு மைவர்தம் ஆப்பை அவிழ்த்தருள் நோக்கு வானமை நோய்வினை வாராமே

காக்கு நாயகன் கச்சியே கம்பனே"

என்பது திருநாவுக்கரசர் திருக்கச்சி ஏகம்பத்தில் பாடிய திருக்குறுந்தொகையாகும்.

திருப்பாலைத்துறை ஆதிகேசுவரர் கோயிற்கருகில் ஒரு திருமடம் இருந்தது. அதற்குப் பெயர் 'காக்கு நாயகன் திருமடம்' என்பதாகும் என்று ஒரு கல்வெட்டு நுவல்கிறது. இது திருக்கச்சியேகம்பத்துத் திருக்குறுந் தொகைச் சொற்றொடரின் அடிப்படையில் அமைந்ததேயாகும். தென் ஆர்க்காடு மாவட்டம் பெருமுக்கில் என்ற ஊரில் முக்யாசலே சுவரர் கோயிலைக் கட்டியவன் கனகராயன் என்ற சிறப்புப் பெயருடையவன். அவருக்குக் காக்குநாயகன் என்பது

இயற்பெயர்.”

மதுராந்தகம் வட்டம் பெண்ணகரத்தில் உள்ள வீர பாண்டியனின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டில்,

'ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்துப் பெருக நகர நாட்டுப் பெருநகர் பிரமீசுவரமுடைய நாயனார் கோயிலில்,

இவ்வூர் இருப்பைப் பாக்கிழான் தாழிகாக்குநாயகன் ஏறி யருளப் பண்ணின முதலியார் காக்கு நாயகர்க்கு காக்கு நாயகன் விசையன் செம்பிய தரையன் வைத்த திருவிளக்கு ஆறு"

என்று காணப் பெறுகிறது". இதில் மூவர் காக்கு நாயகன் என்ற பெயருடையவராகக் காணப்படுகின்றனர். இம்மூவரும் உறவினராதலும் கூடும்.