பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பேராசிரியர்கா. ம. வேங்கடராமையா

திருவொற்றியூரில் ஒரு கல்வெட்டில் இத்தொடா காணப் பெறுகிறது. இராஜநாராயணச் சம்புவராயர் தம் 7ஆம் ஆட்சியாண்டில் சில நிலங்களையும் மனைகளையும் திருவொற்றியூர்க் கோயிலுக்குக் கொடுத்தார்". படம் பக்கநாயக விளாகம் என்பது, திறக்கப்படுவார் மனைக்குக் கிழக்கில் உள்ளது' என்று அக்கல்லெழுத்துக் கூறுகிறது".

புதுக்கோட்டை - குளத்தூர்த் தாலூகா - தென்னங்குடி - தருமபுரீசுவரர் கோயிலில் உள்ள வீரசுந்தர பாண்டிய தேவரது கல்வெட்டில் திருவாசல் திறந்தான் காலாலே திருவாசலிலே அளப்போமாகவும் என்றுள்ளது". திருவாசல் திறந்தான் என்பது இங்கு ஒரு மரக்காலுக்குப் பெயராகக் காணப்படுகிறது. இச்சொற்றொடரும் "கலைகொள் வேதவனப்பதி தன்னிலே கதவு தானும் கடுகத் திறந்த அப்பரது அற்புதத்தைக் குறிப்பதாகவே கொள்ளலாம்.

தவப்பெருந்தேவு செய்தார் "குவப்பெருந் தடக்கை வேடன்

கொடுஞ்சிலை இறைச்சிப் பாரம் துவர்ப் பெருஞ் செருப்பால் நீக்கித்

தூயவாய்க் கலசம் ஆட்ட உவப் பெருங் குருதி சோர

ஒருகனை இடந்தங் கப்ப தவப் பெருந்தேஷ் செய்தார்

சாய்க்காடு மேவினாரே' என்பது திருச்சாய்க்காட்டில் திருநாவுக்கரசர் பாடிய திருநேரிசை இதில் கண்ணப்பரை இறைவன் ஆண்டு கொண்டருளிய செய்தி கூறப்பட்டுள்ளது.

இப்பாடலிற் கண்ட தவப் பெருந்தேவு செய்தார் என்பது சகராண்டு 1342க்குரிய திருக்காளத்திக் கல்வெட்டில்? ஒருவர் பெயராகக் காணப்பெறுகிறது. திருக்காளத்தித் திருமணிக்