பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

நன்னெறிப்பூண்டியுடையான் பஞ்ச... “எம்பிரான் சம்பந்தன்' என்பவன் குறிக்கப்படுகிறான்.”

'பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்" என்றார் சுந்தரர். திருவாய்மூராலயத்தில் திருஞானம் பெற்ற பிள்ளையாரை எழுந்தருளுவித்தவன் வில்லியுடையான் பத்தராய் பணிவார்.... என்பது கல்வெட்டில் கண்டது.

ஆரம்பூண்டான்

சோழ அரசன் காவிரியில் நீராடுங்கால் மணியாரம் நீரில் தவறி வீழ்ந்தது. அரசன், 'சிவபெருமானை இம்மணிய ாரத்தைக் கொண்டருளும்' என்று வேண்டனார். உடனே அம்மணியாரம் திருமஞ்சனக் குடத்தில் புக்கது. திருவானைக்கா எம்பெருமானுக்குத் திருமஞ்சனம் ஆட்டிய பொழுது அந்த மணியாரம் சிவபெருமான் திருக்கழுத்தில் விழுந்து அணி செய்தது. இங்ங்னம் சிவபெருமான் திருவானைக்காவில் ஆரம் பூண்டவரானார். இது திருவானைக்காத்தலவரலாற்றுச் செய்திகளுள் ஒன்று. இதனை,

'பாரும் விண்ணும் கைதொழப் பாயும் கங்கைசடைமேல்

ஆரம் நீரோ டேந்தினான் ஆனைக்காவு சேர்மினே"

எனத் திருஞான சம்பந்தரும், சிறிது விரிவாக,

'தார மாகிய பொன்னித் தண்டுறைஆடி விழுத்தும் நீரில் நின்றடி போற்றி நின்மல கொள்என ஆங்கே ஆரம் கொண்டஎம் ஆனைக் காவுடை ஆதியை நாளும் ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடை யாரே'

எனச் சுந்தரரும் பாடியுள்ளளர்.

ஆரங்கொண்டமையால் இத்தலத்திறைவர் ஆரம் கொண்ட பெருமாள் எனும் பெயர் உற்றார். இத்தலக் கல்வெட்டுகளில் மூன்றில் ஆரம்பூண்டான்' என்ற பெயருடையார் குறிக்கப்பட்டுள்ளனர்".