பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 63

அறியும் பேராவலுடன் அருகில் நிற்கிறார் சுந்தரர். நெஞ்சத்து உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகம் உடையவராகச் சான்றோர் காணப்படுகின்றனர்.

வழக்கில் வென்றபின் அனைவரும் கோயிலுள் நுழைவதாக ஒவியத்தொடரின் இறுதிப்பகுதி அமைகிறது.

இவ்வோவியத்தின் கீழ்ப்புறம் மகளிர் சிலர் உணவு சமைப்பவராகக் காணப்பெறுகின்றது. அது சுந்தரரின் திருமண ஏற்பாட்டினைக் காட்டுவது ஆகலாம்.

ஒலையில் எழுத்து: ஒவியத்தில் காணும் ஆவண ஒலையில், 'இப்படி நானறிவேன்' என்னும் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருக்கின்றன என்று ஆய்வாளர் அரிதிற் கண்டு கூறுவர்." இப்பகுதி ஒலையின் முடிவுப் பகுதியாதல் வேண்டும்.

'இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கிவை

என்னெழுத்து' என ஒலையமைந்ததாகச் சேக்கிழார் கூறுவர்.

கயிலை செல்லுதல் : தடுத்தாட்கொண்ட காட்சி ஒவியத்தின் மேல், சுந்தரரும் சேரமான் பெருமாளும் கயிலை செல்லும் காட்சி ஓவியமாக உள்ளது. நடுநாயகமாக வெள்ளானையின் மீது சுந்தரர் செல்கிறார் வலப்புறம் சேரமான் பெருமாள் வெண்குதிரையின்மீது ஏறி முகில் மண்டலத்தில் பறக்கிறார்.

சேரமான் பெருமாள் குடுமியும் மீசையும் தாடியும் உடையவராகவும், நெருக்கமான கழுத்தணியும் ஒர் உருத்திராக்கமாலையும் உடையவராகவும், அரையில் மட்டுமே ஆடை உயைவராகவும் காட்சி தருகிறார். வெண்புரவியின் சேனம் கடிவாளம் முதலியன மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒவியத்தின் வலப்புறம் காந்தருவர் இசைக் கருவிகளால் இன்னிசை ஒலிக்கத் தேவமாதர் நாட்டியமாடுகின்றனர். இடப்புறம் முனிவர் பலர் உள்ளனர்.