பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

இருந்த திருஞானசம்பந்தர் மடத்தில் மாகேசுவரர்க்கு உணவு ஊட்டுதற்காகத் தானமாக அளித்தான்' என்னும் செய்தி காணப்பெறுகிறது. (238 / 1912)

5. தென்கரை

சோழவந்தானுக்கு அருகில் உள்ள சிற்றுார் தென்கரை இவ்வூர்க் கோயிலில் திருஞான சம்பந்தர் திருமடம் இருந்தமை முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் பதினான்காம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டொன்றில் கண்டது.

6. முன்னியூர்

'முன்னியூரில் உள்ள திருவகத்தீசுவரம் உடைய நாயனார் கோயில் தென்புறம் திருஞானசம்பந்தர் திருமடம் இருந்தது' என்பது திரிபுவனச் சக்கரவர்த்தி இராசராசன் கல்வெட்டொன்றில் கண்டது.

7. காமரசவல்லி

காமரச வல்லியில் திருஞான சம்பந்தர் மடம் இருந்தது. இம்மடத்துக்கு, ஊற்றுக் காட்டுக் கோட்டத்துக் குன்றங்கிழான் திருநாவுக்கரசு தேவன் என்பவன் திரிபுவனச் சக்கரவர்த்திகள் இராசேந்திரனுடைய 12ஆவது ஆட்சியாண்டில் நிலக்கொடை தந்தான்.

8. திருவிழிமிழலை

திருவீழிமிழலையில் வடக்கு வீதியில் திருஞான சம்பந்தர் திருமடம் இருந்தது. இதே வீதியில், திருநாவுக்கரசர் மடமும் இருந்தது - (392 OF1928). திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், வாதவூரடிகள் ஆகியோருக்குச் சுற்றாலயங்கள் செய்விக்கப் பெற்றிருந்தன.

9. பட்டீச்வரம் கல்வெட்டு

பட்டீச்வரம் பலிபீடத்தில் உள்ள மூன்றாம் இராசராசன் காலச் சிதைந்த கல்வெட்டொன்று பழையாறையில்,