பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

9. திருநாவுக்கரசர் மடங்கள்

1. சிதம்பரம்

கோப்பெகுஞ்சிங்கனின் முப்பத்தாறாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில், "சிதம்பரத்தில் அம்பலநாயகப் பெருந்தெரு திருநாவுக்கரைசு தென்திருமடம் இருந்தது. உடையார் அழகிய திருவையாறுடையார் என்பவர் இங்கே வாழ்ந்தார் என்னும் செய்திகள் கூறப்பெற்றுள்ளன.

2. திருவான்மியூர்

மூன்றாம் குலோத்துங்கனின் இருபத்தைந்தாம் ஆண்டுக்குரிய வேளச்சேரிக் கல்லெழுத்துச் சேதிராயதேவன் தொண்டை மண்டலத்துக் குலோத்துங்க சோழவளநாட்டுத்

திருவான்மியூரில் இருந்த திருநாவுக்கரசு மடத்துக்கு வேளச்சேரியில் நிலமளித்தான் என உரைக்கும். (303 of 1911)

3. திருவிழிமிழலை

திருவீழிமிழலையில் வடக்குவீதியில் திருநாவுக்கரசர் மடம் இருந்தது. இம்மடத்திற்குரிய நில விவரங்களைத் திரிபுவனச்

சக்கரவர்த்தி இராசேந்திரனின் கல்வெட்டொன்று காட்டுகிறது (402 of 1908).

4. திருப்பாலத்துறை

திருச்சிமாவட்டம் திருப்பாலத் துறையில் உள்ள முதல் இராசராசனின் இருபத்திரண்டாம் ஆண்டுக் கல்லெழுத்து, "இவ்வூர்க் கோயிற்கருகில் இருந்த திருநாவுக்கரைசு தேவன்

1. (S. I. I. Vol. XII. No. 245, vii, No. 43)