பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5km)育。ー。sffr。 # 03 முடக்கியிருப்பான்னு தோன்றது. ஒரு லட்ச ரூபாய் மதிப்பு இந்தப் பைகளுள் மட்டும் இருக்கும். குத்து மதிப்பில், சரி சரி, நமக்கென்ன? நாம் தேடி வந்தது ஒரு முடிச்சுத்தான். இதோ சுருக்கவே அகப்பட்டு விட்டது. மிஸஸ். கோமதி ரூ. 5000/ எடுத்து ஜேபியில் போட்டுக் கொண்டு, மீதி @ಕಿಕF5೯೧7 அதனதன் இடங்களுக்கு நகர்த்தி விட்டு, லாக்கரைப் பூட்டி, உள் கதவை யடைத்து, பிடியைத் துடைத்து, வெளிக் கதவைப் பூட்டிப்பிடியைத் துடைத்தி, அசைன்மெண்ட் ஓவர் - தோ, நாட் எட். எதையேனும் இாபக மறதியா வெளியில் வெச்சிருக்கப் போறேன். இல்லை. வெளியில் வந்து ஆபீஸ் அறையைப் பூட்டி, மாடியேறிப் பீரோவைத் திறந்து, சாவிக் கொத்தை இருந்த இடத்தில் வைத்துவிட்டு, பீரோவைப் பூட்டி: பீரோ சாவியைச் சேட் தலையணையடியில் வைத்துவிட்டு, மறுபடியும் கீழிறங்கி வாசற் கதவைத் திறந்து தன் பின்னால் பூட்டிக் கொண்டு, வேகமாய் நடக்கலானார். இதுவரை தன்னைத் தாங்கிக் கொண்டிருந்த உவகை வடிய ஆரம்பிப்பதை உணர்ந்தார். ஜல்தி: ஜல்தி! தன்னையே விரட்டிக் கொண்டு, கோவிலை அடைந் ததும், சாவியை அதன் மறைவிடத்திலிருந்து எடுத்துக் கதவைத் திறந்தார். விளக்கில் சுடர், அசைவற்ற திகன் யத்தில் பம்பரம் போல் துரங்கிக் கொண்டிருந்தது. அம்பாளின் பின்புறத்தில், அவள் பீடத்தில் துழாவினார். தெரிந்தவனுக்கும், தேடித் தேடித் தேடினால்தான் கிடைக்கும். பெரியப்பா சொந்தப் பிள்ளையை நம்பவில்லை. பென்சில் டார்ச்சில் ரொம்பவும் உஷாராய்த் தேடினதில் விளிம்பின் கோடு-வெகு நுட்பமான கோடுவெகு நுட்பமாக விரல் ரேகைக்கு இடறிற்று. ஜாக்கிரதை