பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கல் சிரிக்கிறது

எப்பவுமே யிருக்கு. உன்னைப் பற்றிப் பேசுடா!”

“என்னைப் பற்றி என்ன பேசனும்?”

“என்னடா பேத்தறே? நீ மறைஞ்சு போய் முப்பத்து அஞ்சு வருஷமாறது. முப்பத்து அஞ்சு வருஷத்தை ஏப்பம் விட்டுட்டு என்ன பேசனும் என்கறே? நீ கொல்லு கொலைக்கு அஞ்ச மாட்டே."


“அபசாரம், அபசாரம் - கோவில்லே உட்கார்ந்துண்டு...”


"ஆத்துக்கு வாயேன்டா.”

“வராமலா போறேன்? இப்போ, சொல்லாமல் வந்து தொந்தரவு கொடுக்கப்படாது.”


“உனக்குன்னு என்னடா தனியா பண்ணப் போறோம்? ஆத்து மனுஷன் நீ!”


“வரேன். கண்டிப்பா வரேன்.”


“குடும்பத்தோடு வரணும். இப்பவே சொல்லிட்டேன். காலையிலேயே வந்துடுங்கோ. எத்தனை குழந்தைகள் ?“


“ஹாம்... அதுக்கெல்லாம் கொடுப்பனை இல்லை.”


இங்கிருந்தே கர்ப்பக்ருஹத்தில் அகல் சுடர் லேசாகப் படபடத்தது. மலை யேறுகிறதோ?


"நீ சொல்றது விளங்கல்லியே!”


“அதிருக்கட்டும், மணி. உன்னால ஒரு தயவு ஆகனுமே!”

“மழுப்பறே!”


“சரி, மழுப்பறேன். விஷயத்துக்கு வரலாம்.”


“அதென்னடாப்பா விஷயம்?”