பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@fr。ぶ。女rr. # 05: இதயம் ஒரு தரம் தொண்டைவரை தாவிக் குதித்தது. திரும்பிப் பார்த்தால் தெரு கூர்க்கா ஸல்யூட் டில் அசையாமல் நின்றான். அவனுத்குத் தலையை ஆட்டிவிட்டுக் கதவை அவசரமாய்த் திறந்து மூடிக் கொண்டு உள்ளே கதவின் மேல் சாய்ந்தார். சந்தேகமில்லை. எனக்கு வயசாகிக் கொண்டு வரது. சாவியை அதன் ஆணியில் மாட்டிவிட்டுப் படுக்கையில் உட் கார்ந்தார். அப்பா, என்ன தாகம்! தலைமாட்டில் சொம்பு தீர்த்தத்தையும் மடக்-மடக். பசி வேறு. ஆனால் தின்ன ஒண்னுமில்லை. ரொட்டிக்காரன் காவையில்தான் வருவான். டின்னில் உப்பு பிஸ்கட் நாலைந்து - இந்தப் பசிக்கு எந்த மூலை? - இன்னும் கிளப்பி விட்டது. தலை யணையில் தலை சாய்ந்ததே யொழிய, தூக்கம் ஏது? அடுத்தது என்ன? சுருள் ஒடத் தலைப்பட்டது. அன்று பார்த்த பின் கோமதியைச் சந்திக்கவில்லை. அவளைக் கண்டு தன்னிடம் இருந்த ஐயாயிரத்தைக் கொடுத்து, சேட்டிடம் கடனைப் பைசல் பண்ணி நகையைத் திருப்பச் சொன்னால் என்ன ஆகும்? தேடுவான், குழம்புவான். இரண்டு நாள் கழித்து வரச் சொல்வான். மறுபடியும் தேடுவான். கலாட்டா, அமர்க்களம். நாளை ஏற்படுமோ? அ!-கு பிஸினெலை ஒழுங்காய் லைசென்ஸ் எடுத்துப் பண்ணுகிறானோ? இல்லை யென்று கோமதி சொன்னதாக நினைப்பு. தன் நகை மேல் கடன் வாங்கவே ஏகப்பட்ட சிபாரிசு என்றாள். அடகு வியாபாரம் முறையாக நடத்தவில்லை யென்றால், இது மாதிரி விளம்பரத்துக்கு இடம்கொடுக்க முடியாமல் திருடனுக்குத் தேள் கொட்டினாற் போல் தவிப்பான். கடன் போக நகை மதிப்புை, தற்போதைய மார்க்கெட் ரேட்டில் ஈடு பண்ணி யாகணும்; என் பணத்தை வாபஸ் பண்ணி, மிச்சம் அவளுக்கு லாபம்.