பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

கல் சிரிக்கிறது


எத்தனை நாழியானாலும் விடவில்லை. தான் அவ்வப் போது முளைப்பதை மறைக்கவும் முயலவில்லை. தூண்டிலில் மாட்டிக் கொண்ட மீனுக்கு நூல் விடு கிறார்கள். தானாக ஒய்வதற்குக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அவசரமே யில்லே. எதற்காகக் காத்திருக் கிறார்கள்? அவர் தன் ரூமுக்குப் போகவில்லை. அது வேறு தன் னையே காட்டிக் கொடுத்துக் கொள்ளணுமா? கோவில்? இன்னும் சனிக்கிழமை வரவில்லை. ஆனால் வேறு போக்கிடமில்லாமல் கால் அவரை அங்கே இழுத்துச் சென்றது. மண்டபத்தில் உட்கார் ந்திருந்தார். என்ன செய்ய லாம்? நேரம், அதன் நியதிகள் யாரைச் சட்டை செய்கின் றன? ரம்மியமான சந்தியா வேளை. தெருவில் மும்முர மான போக்கு வரத்து. அவரவர் ஜோலி அவரவர்க்கு. என்ன செய்யலாம்? கிணற்றில் ம்ொள்ள வந்தவள் யாரோ அவை &L நீ அ ہوتے நி سائر யாளம் கண்டு கொண்டு நமஸ்கரித்துவிட்டுச் சென்றாள். என்ன செய்யலாம்? இப்படியே கம்பி நீட்டலாமா? நேரே ரூமுக்குப் போய்-சாவி-ஜேபியில் தொட்டுப் பார்த்துக் கொண்டார். நல்லவேளை-கேஷ், பெட்டியில் ரொம்ப இருக்கற மாதிரி தெரியல்லே-ஏதோ இருக்கிறதுதான். மோதிரம், ரிஸ்ட் வாட்ச் இருக்கு, புல்லாங்குழல், மறக்காமல்-தெரு வில் துண்டை விரிச்சு நாலு காசு விழுந்து-இனி அப்படித் தான் பிழைப்போ என்னவோ? -- மறந்து போச்சே, கோமதியின் நகையிருக்கே - மறுவேஷ்டி மறு சொக்காய் மட்டும் ஒரு சின்ன பாக்கிங், நேரே ரயிலேறி விட வேண்