பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

கல் சிரிக்கிறது


அசையாமல் வெகு நேரம் தரையைப் பார்த்த வண் ணம் உட்கார்ந்திருந்தார். விதி தரையிலா எழுதியிருக்கிறது? மாலை, சுமார் நாலு மணியிருக்கும். ஒரு சிவப்புத் தலைப்பா மாடிக்கு வந்தது. லார், உங்களை இன்ஸ்பெக்டர் அழைத்து வரச் சொன்னார்.' அப்பாடி! ஆபீஸ் அறையில் இன்ஸ்பெக்டர் உட்கார்ந்திருந் தார். ஆ, குட் மார்னிங், மிஸ்டர் தர்மராஜன். இப்படி உட்காருங்க. இதோ இங்கே எதிரே சிகரெட்?'-பாக் கெட்டை நீட்டினார். நோ?” புகையைப் பலமாக 'உஸ்'-வெளியே விட்டார். ஏதோ காரியம் முடிந்த இன்ப அசதி, மிஸ்டர் தர்மராஜன், நாம் கொஞ்சம் பேச வேண்டி யிருக்கு ஏ 433 ஏன் இப்படி குட்டி போட்ட பூனை மாதிரி நீ அலையறே நியூஸென்ஸ். வெளியிலே நில்லு, இதோ, இந்த வாசல்படியிலே-கண்ணிலே படற மாதிரி.' 433ஐ அவருக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. 433ஐ யாருக்கும் பிடிக்காது. ராrஸ்வளர்த்தி,கொரில்லா வுக்குக் காக்கி உடுத்தின மாதிரி. அந்தக் குறுகிய நெற்றி யும், சப்பை மூக்கும், தடித்த உதடும் "மிஸ்டர் தர்மராஜன், இதுவரை உங்களைக் கூப் பிட்டு விசாரிக்கவில்லையே என்று உங்களுக்குத் தோன்றி யிருக்கலாம். எங்கள் சோதனைகளை முடிச்சுகிட்டு அப் புறம் உங்களை அப்ரோச் பண்ற மாதிரிதான் இருந்தது. என்ன அவசரம்?’-புக் புக்