பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லா.ச.ரா.

7



“வாரத்தில் ஒரு நாள் பூஜை எனக்கு வேணும்.”


மணிக்குச் சிரிப்பில் உடம்பு எல்லாம் குலுங்கிற்று. புரைக்கேறி உச்சந்தலையைத் தட்டிக் கொண்டார். சரீரம் மடி மடியாகக் குலுங்கிற்று. அந்த ஆள், இந்த அலை அடங்கும்வரை பொறுமையாகக் காத்திருந்தார்


“டேய் தருமு, நீ நல்ல தமாஷான ஆளுதான்.”


“நான் தமாஷ் பண்ணல்லே. ரொம்ப சீரியஸா இருக்கேன்.”


“என்ன தருமு, இந்த அபஸ்வித்துக்கெல்லாம் நீ ஆசைப் படலாமா? அதுவும் நீ - ”


“இது என்ன ஐஸ்?”


“நிஜம்மாத்தான்டா சொல்றேன். நீயே ஒரு சன்னிதானம் மாதிரிதான் இருக்கே. உன்னோடே பேசிண்டு தான் இருக்கேன். 'டா' போட்டுக்கறேன் , அப்பப்போ தைரியத்துக்கு. நீயும் சகஜமாத்தான் பழகறே. ஆனால் உள்ளூர என்னவோ 'திக்திக்' -”


“மணி, ப்ளீஸ்...”


“சத்யமாடா, விட்டேன்னு!”

தர்மராஜன் செவிகளைப் பொத்திக் கொண்டார்.


“விஷயத்துக்கு வரயா?”


“இது உனக்கு ஏதுக்கப்பா, விடு. இது ஒரு பிழைப்பா?”


“மணி, கத்துண்டது ஏதும் எனக்கு இன்னும் பாடம் மறந்துடல்லே. வாரத்தில் ஒரு நாள் தான் கேக்கறேன்.”


“அதெப்படி தருமு, நடக்கற காரியமாப் பேசு!"


“அப்படின்னா மாட்டேன்கறயா?” அவர் பெருமூச் செறிந்தார்.