பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●r。 *。アf了。 ; : 5 "நான் தலையைச் சுத்தி மூக்கைப் பிடிக்கப் போற தில்லே. உங்களுக்கும் ரொம்ப சஸ்பென்ஸ்தான். ரொம் பவும்தான் சகிச்சிட்டிருந்திருக்கீங்க. எனக்குப் புரியல் லியா? வயசில் உங்களுக்கு நான் பிள்ளை மாதிரி'சிகரெட் நுனியைக் கீழே போட்டுக் கால் பூட்ஸில் தேய்த்து அணைத்தார். "மிஸ்டர் மனக்சந்துக்குக் குடும்பமிருந்தால் குடும்பத் தில் யாரேனும் இந்தக் காரியத்தைச் செய்திருப்பாங்க ளோன்னு விசாரணை வேறே மாதிரி போயிருக்கும். மரி யாகசி பாத்திரம் தேய்க்க காலை ஒரு மணி நேரம். அப் புறம் நாய்க்கு ஜவ்வு போட மத்தியானம் ஒரு கால் மணி நேரம். அத்தோடு சரி. எம்ப்ராய்டரி வொர்க்கர்ஸுக்கு பகல் வேலையோடு சரி. ராத் தங்கி, இறந்தவருக்குச் சாப்பாடு செய்து அவரோடு பேசிப் பழகி, அவரைப்பற்றி மத்தவங்களை விட விவரங்கள் தெரிஞ்சவர் நீங்கள் ஒருத் தர்தான். ஸோ யூ ஆர் த சஸ்பெக்ட் ஒன்லி சஸ்பெக்ட். அதனால், உங்களைப் பத்தி எங்களுக்கு என்ன அவசரம். நீங்கள் போகாதவரை? நீங்கள்தான் ஒடிப் போகல்லியே! நீங்கள் சரியாத்தான் நடந்துக்கிட்டிங்க. வேறு வழியும் இல்லை. அது உங்களுக்கே தெரியும். லென்ஸிபிள் மேன். 'ஒரு விஷயம். மனக்சந்த் துக்க மாத்திரையால் தான் செத்துப் போனார்னு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்படி நிச்சயமா ருசு ஆவல்லே.” அம்மாடி! பெருமூச்சைத் தர்மராஜன் வெளியில் தெரி யாதபடி சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். மகராஜன் இன்ஸ்பெக்டர். அழகாய்த்தானிருக்கான். மூக்கும் முழி யும் ஆண்மையுமா. இது மாதிரி பிள்ளை இருந்தால் வலிக்கிறதா? 'ஏற்கெனவே இதயக் கோளாறு கேஸ். தூக்கத்தில் இறந்திருக்கார். ஆனால் விஷயம் அத்தோடு முடியல்லியே. அப்போ எல்லாருக்கும் நிம்மதிதான் வேறே சிக்கல் வந் திடுச்சே. கார்டினால் மாத்திரை எப்படி சேட் மருந்து ஸ்டாக்கிலே வந்திருச்சு? டாக்டர் ஹமீத் பிரிஸ்கிரைப்