பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கல் சிரிக்கிறது

“உன் பிரக்ஞை.”

“அப்டின்னா?”

"நீயே கண்டு பிடித்துக்கொள்.”

திரும்பிப் படுத்துக் கொண்டு விட்டார்.

என்னைப் போவென்று சொல்கிற அவர் முறை அது போலும். இனி இங்கிருந்து உனக்காக வேண்டியது ஒன்றுமில்லை என்று அவர் விளக்கும் முறை அது.

அடுத்த நாளே கிளம்பி விட்டேன். இன்னும் என் ப்ரக்ஞையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

ஊர்களில் திரிந்த அந்த நாட்களில், வாழ்க்கையின் மேடு பள்ளங்களுக்கேற்ப, மரத்தடியில் வானத்தைப் பார்த்துக்கொண்டோ, கட்டிலில் விட்டத்தைப் பார்த்துக் கொண்டோ, குருட்டு யோசனை செய்கையில் தோன்றும், பெரியப்பா என்ன நாடக பாணியில் பேசினாரே, செயற்கையா? என்ன அர்த்தம்? என்ன மனசில் வெச்சிண்- டிருந்தார்?

'இப்டோ கொஞ்சங் கொஞ்சம் ஏதோ வெளிச்சம். அப்படி ஒண்ணும் பளிச்சுனு இல்லே-எந்தத் தர்க்கமும் - அது தர்க்கமோ, குதர்க்கமோ; ரெண்டும் ஒண்ணில் ஒண்னு குமைஞ்சு ஒண்ணுதானே! அதனுடைய உச்சத்தில், அதி நுட்ப கதியில், எனக்கு நானே சட்டம், நானே தண்டனை, நானே நியாயம்.'

நீண்ட பெருமூச்சு தன்னிடமிருந்து கிளம்புவதை உணர்ந்தார். தொப்புளிலிருந்து புறப்பட்டு, உடலின் அத்தனை நரம்புகளிலிருந்து அவைகளின் அசதியை உருவிக் கொண்டு புகைப்போக்கி வழி வெளிப் போவது போல், நாசி வழி, பிராணனிலிருந்து ஒரு சட்டை கழன்று உதிர்ந்தாற்போல்...

இதென்ன வாழ்க்கையின் அலுப்பா? உயிரின் விசுவ-