பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லா.ச.ரா.

17

ரூபம் கண்ட திகைப்பா? தேன் குருவி போல், சிட்டுச் சிறகுகளை அடித்துக் கொண்டு அந்தரத்தில் ஸ்தம்பம் எத்தனை நாழி செய்ய முடியும்? தலை சுத்தறது.

எண்ணம் இந்தக் கட்டத்தை அடைந்ததும், ஏதோ நினைப்பு வந்தது. கட்டிலடியில் பெட்டியை இழுத்துப் புல்லாங்குழலையெடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.

எந்தக் குருவிடம் என்ன ஒழுங்காய்ப் பாடம்?

என்றோ எங்கோ, ஒரு சப்பாத்திப் புதரடியில், மறந்தோ துறந்தோ எந்தப் பிடாரனோ விட்டுப் போனதைக் கண்டெடுத்து இப்போ எத்தனை வருஷங்கள் ஆகியிருக்கும்!

எனக்கே பண்டங்களைப் பத்திரமாய் வைத்துக் கொள்ளும் சுபாவம் உண்டு.

நான் காரணங்கள் காட்டி ஒரு சித்தாந்தமே விருத்தி செய்வேன்.

பண்டங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டாலும், பண்டங்கள், மனிதன் இரண்டுமே அநித்யமானாலும் பண்டங்கள் மனிதனை விட நித்யம்.

நான் வந்து எடுக்கும் முன் சப்பாத்திப் புதரண்டை எத்தனை நாள் கிடந்ததோ? அதன் இசை அதனில் உறங்கிக் கொண்டு ! கற்பு தன்னைக் காத்துக் கொள்ளும் வழி யார் கண்ணிலும் படாமல் இருப்பதே. தனிமை - எதிலும் ஒட்டாத தனிமை, தனித் தன்மை, ஒரு எட்டாத சொத்துதான். ஜடப் பொருள் என்பதால் உறவு போய் விடுமா என்ன? பழகிப் பழகி இடையே ஒரு ஊமை அந்யோன்யம் வளர்ந்து எனக்கு மட்டும் உயிர் கொள்வதை உணர்வதில் தெரியும் மகிழ்ச்சியின் அருமை, அறியத் தெரிந்தவர்களுக்குத்தான் புரியும். இல்லாட்டா ஒரு

க. சி. -2