பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

கல் சிரிக்கிறது



“மது ! மது !! பாவி!!!” இமைகளை இறுக மூடி அத்தோற்றத்தைக் கசக்க முயன்றார்.

கசங்கிப் போயிற்று. இதழ் இதழாய்ப் பிய்ந்து போயிற்று.

இப்போது இமைகளைத் திறக்க முடிந்தது.

ஆனால் திறக்கவில்லை.

விழியோரங்கள் நனைந்திருந்தன.

3

ழுப்பி விட்டதே புகைப்போக்கி வழியாகத் தோசை வாசனைதான். நாசி வழி மூளைக்குச் சென்று மூளையிலிருந்து விழிப்புக்குச் சேதி தந்தி பறந்தது: “எழுந்திரு எழுந்திரு. வெயிலே வந்தாச்சு !”

விடி வேளையின் அசர்த்தல். விழிப்பு வந்ததும் கண்ணைத் திறவாமல் உடற் சோம்பல் விழிப்போடு ஊடலாடும் ஸ்வாரஸ்யமான கட்டம். கொஞ்ச நேரம் அனுபவிக்கலாம், பிறகு சரிப்படாது. ஆனால் அனுபவிக்கும் வரை வெகு சுகம்.

சொய்ஞ்ஞ்...

கல்லில் மாவு விழுந்து புதுசாய்த் தோசை எழுதியாறது. கமகம..அப்பப்பா...நாக்கு ஊறுகிறது. வயிறோடு நாக்கும் சேர்ந்து கொண்டு விட்டது. நெய்யில் மொறுமொறுக்கிறது.

கீழே, காலைப் பலகாரப் பழக்கம். நாடார். சமையல் எப்படியோ? தோசைக்கும் இட்டிலிக்கும் திருநெல்வேலி