பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கல் சிரிக்கிறது

நாடாரும் அவளும் அவசரமாய்க் கீழேயிறங்கிப் போகிறார்கள். ஏனோ இந்தப் பயம்? ஒரு பக்கம் வேடிக்கையாக இருக்கிறது. ஒரு பக்கம் வியப்பாக இருக்கிறது. ரொம்ப வியப்பாக. இந்தக் காலத்தில் மனிதனுக்கு மனி தன் இவ்வளவு பக்தி சிரத்தை உண்டா?

தோசையை விண்டால் ஒவ்வொரு விள்ளலும் வெட்கித் துவள்கிறது. வாயில் போட்டுக் கொண்டதும் காணோம் என்பதுதான் தெரிகிறது; கடித்தேன் என்பது நினைவில்லை, நெஞ்சு முள்ளில், லேசாகத் தடுக்கி உள்ளிறங்குகையில் ஒரு தளிரு தெரிகிறது.

சட்னி பயந்த மாதிரிக் காரமாக இல்லை.

கூட்டு-ஹீம், இங்கு வந்து இவர்களும் நன்றாகச் செய்யக் கற்றுக் கொண்டு விட்டார்கள்.

காபிதான் வாயில் வைக்க வழங்கவில்லை. காபி சூத்ரம் இன்னும் பிராம்மணன் கையில்தான் இருக்கிறது. அதற்குக் குருக்கள் ஜாதி, நாங்கள் கூட லாயக்கில்லை. கும்பகோணம், கோயமுத்தூர் டிகிரி-நாக்கை அறுத்துப் போடு. நேற்றிரவு நினைத்ததெல்லாம் நேற்றோடு போச்சாக்கும்.

பசி வந்திட...

பசி அடங்கியதும் உலகம் எவ்வளவு ரம்யமாகி விட்டது! இன்று ஆனால் தன்னிலேயே வேளை, ரமணீயமாகத்தானிருக்கிறது! வெண்மேகம் கோன் ஐஸ் மாதிரி வானத்தில் பொங்கி வழிகிறது. புகைப்புலன் நீலம்கூட ஒரு தினுசாய்க் கண்களைக் குளுமையில் குளிப்பாட்டும் நீலம், நடந்து கொண்டே யிருக்கிறேன். வேலைக்குச் செல்வோரும் பள்ளிக்குச் செல்வோரும்...காலை 'ஷிப்டின்' சுறுசுறுப்பு தனியாய்த் தெரிகிறது.

ஒரு பஸ்ஸில் ஏறுகிறேன். எங்கே போகிறேன், என்ன-