பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கல் சிரிக்கிறது


“மறுபடியும் நாக்கை நீட்டவா? நான்தான் அந்த மந்திரவாதி.”

“விளையாடாதேங்கோ ஸார்...”

“ஒ. கே. பரஸ்பர ஈர்ப்பு. காந்த சக்தி.”

“கண்டிப்பா இருக்கணும். இருக்கு. திடீர்னு அலுத்துண்டு நீங்கள் வராமல் போயிட்டா-?” தோ பார். வாழ்க்கையில் எதுதான் நிச்சயம் இதோ இறங்கிப் போறேன். மேலே லாரி ஏறிடுத்து...”

காதைப் பொத்திக் கொண்டாள். வாயை மூடுங்கோ!” சீறினாள்.

அந்தக் கோபத்தைக் கண்டு அவரே அடங்கிப் போனார். “ஏன் கோமதி? என்ன விஷயம்?”

“எனக்கே தெரியல்லே. வருத்தம் தெரிவிக்கனுமா? ரொம்ப சீண்டறீங்க ஸார். அதுலே நீங்கள் கொஞ்சம் கூட மாறல்லே.”

“நீயும் தான் மாறவில்லை.”

“எப்படி?”

“உன் கோபம். உனக்கு ஞாபகம் இருக்கா? உனக்கு ஒவர் டைம் அ னு ம தி க் க ல் லே ன் னு ஏகத்தாறா முறைச்சயே?”

“முறைச்சதோடு சரி, நீங்கள் கடைசிவரை கொடுக்கல்லியே!”

“நீயா கேட்டே? உங்கள் தொழிற் சங்கத் தலைவரின் தூண்டுதல். ஒவர் டைம் செய்யாமலே ஓவர்டைம் கொடுக்கணும்னா அது என்ன நியாயம்? நீ மூணு நாள் என்னோடு பேசல்லே. நினைவிருக்கா?”

"அப்புறம் நானேதானே உங்களிடம் வலியப் பேசினேன். எனக்கு மனசு கேட்கல்லே சார்.”