பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா.

33


'கடவுள் புண்ணியத்தில் நீயாவது மாறாமல் இருக்கையே. லுக்- கைக் கெடிகாரத்தின் மீது கண மின்வெட்டி மீண்டது. உனக்கு நேரமாயிட்டுதுன்னு நினைக்கிறேன். இத்துடன் நம்ம காவல்காரன் மூணு தடவை எட்டிப் பார்த்தாச்சு. நீ போ!' எழுந்து நின்றாள். இன்று சாயந்திரம் வருகிறீர்கள், இல்லையா?”

  • * egy t_- pTrrLDIT! 'இல்லே ஸார். உங்களிடம் இப்போ புதுசா ஒரு தன்மை கவனிச்சேன், ஏதோ நீங்கள் பூமியில் பாவ வில்லை போல், காற்றில் கரைந்து விடுவீர்கள் போல!' "அ-ஹ்-ஹா தருமராஜா ரத சக்கிரம் பூமிக்கு ரெண்டு விரல்கடை உயரத்தில். நான் இன்னும் என் முதல் பொய்யைச் சொல்லவில்லை-’’

அவள் சென்ற மூன்று நிமிடங்களுக்கெல்லாம் ஸர்வர் வந்து பில்லையும் பணத்தையும் எண்ணிப் பார்த்து எடுத்துக் கொண்டான். டிப் பத்து காசுதான். எரிச்சல் வந்தது. இவங்க எல்லாம் என்னத்துக்கு இங்கே வராங்க? இவங்களுக்குத்தான் தண்ணிப் பந்தல் ஒட்டல் இடறி விழுந்தா இருக்கே இப்படி ரெண்டு கிராக்கி வந்துச்சுன்னா குளிர் சாதனத்தை மூட வேண்டியது தான். என்னவோ தேனிலவு ஜோடியாட்டம் இங்கே வந்து டாவு’ அடிக்கறதில் குறைச்சல் இல்லே-’ தெருவில் இறங்கியாச்சு. வெய்யிலில் வெம்மை ஏறி விட்டது. திடீரென விவரிக்கொனா ஒரு தனிமை, இத்தனை நெரிசல், இரைச்சல், வண்டி, மனிதர்கள் போக்குவரத்து நடுவே. நடை, இதுதான் முடியும். நடந்துண்டே யிரு. புஸ்தகக் கடை உள்ளே நுழைந்து ஒரு சில ஏடுகளைப் புரட்டு. ஊஹூம். க. சி.- 3