பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா.

35


உள்ளே போனதும் ஆட்கொண்ட குளிர் காற்று. ஒரு கல் பெஞ்சில் உட்கார வைத்துப் பிறகு ஆளை பெஞ்சின் மேல் சாய்த்தது. பரவாயில்லையே இங்கு பட்சி சிறகைக் கோதிக் கொள்வதுபோல், மனதைக் கோதிக் கொஞ்சம் அடக்கலாம். மரங்களின் கிளைகளும் இலைகளும் மேலே கலக்கையில் தரையில் ஒளிப்புள்ளி லைத்த கோலக் கட்டுகள் உயிரோடு அசைந்தன. சாய்ந்த வெய்யிலில் லேசு மஞ்சள் வானத்தை இலைப் பச்சைத் தடுக்கு முடைந்து அடக்க முயன்றது. மாலைக் காற்று கிளம்பி விட்டது. கண் செருகிற்று. வண்டிப் போக்குவரத்துச் சத்தங்கள் அலை சுருண்டு மங்கித் துார ஓய்ந்தன. து...ர்...இதுவரை நான் நேரத்தோடு போராடிய நேரம், இப்போது என் உடலையே ஒரு பாத்திரமாய், தான் ஒரு நீல ஸ்படிக நிற பானமாய் நிறைந்து ஆனால் ஒரு சொட்டுகூடக் கீழே வழியாமல் விளிம்பு துளும்புகிறது. தூக்கத்துக்கும் விழிப் புக்கும் இதுதான் இடை விளிம்போ! தூங்காமல் துரங்கிச் சுகம் பெறுவதைக் காலம் பாடினவர் என்ன அர்த்தம் கொண்டாரோ? அதன் கோடி இதுதானோ? என்ன சுகம்: என்ன சுகம் தூக்கம் விழிப்புள் நழுவுகையில், விழிப்பு தூக்கத்துள் நழுவுகையில் எதனின்று எது? அந்த அரைக்கண் மரண சுகத்தை, உடலினின்று ப்ரக்ஞையின் விடுதலையை, ஏதோ காற்றில் சுழன்று சுழன்று மார் மேல் இறங்கி, விழிப்பு வெடுக்கென்று பிரா னனை மீண்டும் உள்ளுக்கு இழுத்து விட்டது. "முடிவுகள் முடிவுகள். விடிவுகள் விடிவுகள், முடிவு களே விடிவுகள்-வாய் என்னத்தையோ உளறிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தார். மார்பிலிருந்து ஒரு இலை விழுந்தது. இதுவா சமயத்தில் உயிரை இப்படி வகுக்கிறது? கைக்கெடிகாரத்தில் மணி நாலரை. அட, இங்கேயே தினம் வந்து இந்த வேளைக்குப் படுக்கலாம். போலிருக்கே ஜிப்பாப் பையுள் யதேச்சையாக நுழைந்த கை துணுக்குற்று நின்று துழாவிற்று.