பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

கல் சிரிக்கிறது


"இந்த ரெண்டுங் கெட்டான் வேளையிலா?” விளையாடிட்டு வந்தான். பசிக்கறதுன்னான். பசி தாளமாட்டான். இருக்கிற மத்தியான சோத்தை மோருஞ் சாதம் பிசைஞ்சு போட்டேன். நமக்கும்தான் சமையல் நேரமாகுமேன்னு அலுப்பு, துரங்கிட்டான்.' 'பார்க்கவாமா?’’ இதேபோல் இன்னொரு தாழ்வாரமா? நடை பாதை யின் தொடர்ச்சியா? ஒரு நிறுவையில் ஆடும் தொட்டிலில் பையன் தூங்கிக் கொண்டிருந்தான். பையன் தொட்டில் வயதைத் தாண்டியாச்சு. '-ஆனால் இதுதான் அவனுடைய வழக்கமான இடம். கோவிச்சுண்டாலும் சரி. சந்தோஷப்பட்டாலும் சரி. அவனுடைய முருங்கை மரம் இதில் உட்கார்ந்துண்டு தான் வீட்டுப்பாடம். கவனம் தனக்கு விளையாட்டு-’’ அவளையே உரித்து வைத்திருந்தது. குழந்தையைப் பார்த்துக் கொண்டே, ஒரக்கண் அவள் மேல் போயிற்று. அந்த நிமிஷத்துக்கு அவனே - அவள் வாழ்வின் முழு நம் பிக்கையாக மாறி அந்த ஆசை பூரா குழந்தைமேல் குவிந்த மாதிரி தோன்றிற்று. உடலின் உயிர் திரண்டு கண்களில் குழுமி, வேறு யாருக்கும் பங்கு இல்லாத ஆசை. ஒரு அதி தம். மூழ்கிக் கொண்டிருப்பவன் கரைக்குக் கரை பற்றும் ஒரு வேகம். என் தாயும் இந்தப் பருவத்தில் துள்ளியில் என்னை இப்படித்தான் பார்த்திருப்பாளோ? பையனைக் கண்டு லேசாய் எனக்குப் பொறாமையாக இருக்கோ? இருக்கலாமோ? தோணிடுத்தே. கேள்வி ரூபத்தில் அதை என்ன பண்றது? இந்த வயசிலா, இந்தப் பச்சைக்குழந் தையின் மேல் பொறாமை? இந்தப் பார்வையின் பரிசுக்கு எத்தனை வயதானாலும் காத்திருக்கலாமே ! அவளே ஏதோ சிந்தனையுள் நழுவி விட்டாற்ப்ோல், கண் ஒளி உள்ளுக்கு இழுத்தாற்போல் மங்கிற்று. காலப்ர மாணங்கள் துளசி மணிகள் போல் ஒன்றுடன் ஒன்று