பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

கல் சிரிக்கிறது


ஒரு சமயம், ஒரே ஒரு சமயம், இருவரும் அவரவர் யோசனையில் அமிழ்ந்து, வேகமாக எதிரும் புதிருமாய் வருகையில் மோதிக் கொண்டார்கள். நல்ல வேளை, ஒரு வனும் அருகில் இல்லை. இருந்தால் பெரிய முடிச்சாய்ப் போட்டிருப்பான்கள். அவர் உடல் கூசிப் போனார். மேலே ஆபிஸ் அலுவல்கள் அவர்களிடையே நடந்து கொண்டிருந்தன. பிறகு தனக்கே மனசு கேட்கவில்லை. இரண்டு நிமி ஷம் இருவருக்கும் தற்செயலாகத் தனிமை கிடைத்ததும் 'கோமதி என்னை மன்னிச்சுடு- - அவள் வியப்புடன், உண்மையில் புரியாமலே நிமிர்ந் தாள். 'உன் மேல் அப்படி இடிச்சுக்க நேர்ந்ததுக்கு-’ அடேயப்பா, என்னவோ ஏதோன்னு பார்த்தேன். நான் அதைப் பத்தி நினைக்கக் கூட இல்லை' - இது என்ன, அவளுடைய பெருந்தன்மையா? இல்லை, வெகு வரியா? கல்மிஷம், நாடகம் எல்லாம் என் மனசில்தானா? ஸ்பரிசம் - புலன்களுள் ஆபத்தானது. தொடல் என் றாலே நம் மனது அஞ்சறது. இந்தக் கூச்சம்தான் நம் இந்தியப் பண்பாட்டின் உச்சமா? பவித்ரத்தை - அப்படி: யென்றால் அது என்னவோ ஏதோ? எவ்வளவுதான் ஒரழிஞ்சாலும் எஞ்சி யாருக்கும் எட்ட முடியாமல் எவரி டமும் ஒரு பவித்ரம் நிற்கிறது. அதைக் காப்பாற்றியே ஆகனும் என்று எவ்வளவோ ஆழத்தில் மனசடியில் புதைத்தாலும், புதைந்திருந்தாலும் ஒரு ஆட்சேபக் குரல் கதறுகிறது. இந்த அஞ்சலே இந்த ஆட்சேபணையே இரு வரையும் காப்பாற்றுகிறது. அழனும் என்று இருந்தால் அழுது அடங்க வேண்டியதுதான். அடங்க முடியாவிட் டால் அழுது கொண்டே யிருக்க வேண்டியதுதான் இது பார்த்தால் கண் துடைப்புக்கடங்கும் துக்கமாகத் தோணலே.