பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Göf了。 学。第「fr。 5露 படிப்படியாக அலை அடங்க ஆரம்பித்தது. மூக்கை உறிஞ்சினாள். அவர் சரியாயில்லே. சீட்டாடறார். கலியாணத் துக்கு முன்னாலேயே பழக்கம் இருக்கும் போலிருக்கு. நடு மனுஷாள் பொத்தி வெச்சுப் பண்ணிட்டா. தாலிக் கயிறு சுருக்கா மாறியே போச்சு. அப்போ என்ன தெரி யறது? ஆள் அழகா துப்பட்டிக்காரா! ஏமாந்து போனேன். உண்மையா சொல்றேன். நீங்கள் கூட என்ன வேணுமானா லும் அர்த்தம் பண்ணிக்கலாம். ஏதோ ஒரு தினுசில், முக ஜாடையில் உங்களை ஞாபகப்படுத்தற மாதிரி யிருந் ததும் ஒரு காரணமாயிருந்திருக்கலாம். அதுகூட அவ. ருக்கு நாளடைவில் அழிஞ்சுண்டு வரது. எனக்குத்தான் தகப்பன் பித்தோ ஒ! என்னவோ? அது என் அப்பா மேல் இல்லாமல் உங்களிடம் இருப்பானேன்?’ சந்திரனின் தேசல் போல் ஒரு துக்கச் சிரிப்பு. இதோ என் கலியானப் போட்டாவைக் கொண்டு வரேன். நீங்களே பாருங் களேன்-’’ : அப்படி ஒன்றும் பெரிய ஒற்றுமை சொல்ல இல்லே. ஆனால் இல்லாமலும் இல்லே. ஒரு வேளை அந்த உதடு களின் வார்ப்பில், மோவாய்க் குழியில், கண்களின் பழுப் பில் இருக்கலாமோ என்னவோ? இந்தக் கண்களில் ஒரு மழுப்பல் தெரிந்தது. எது எப்படியிருந்தால் என்ன? தோற்றுப் போன வாழ்க்கை இருவருக்கும்தான். அவன் மேலும் ஆத்திரம் அவருக்கு வரவில்லை. மாட்ட வைத்து விடுகிறோம். மழைக்காகக் கட்டிடத்தில் ஒதுங்குகிறோம். எதிர்பாராதவிதமாகக் கட்டிடம் தலை மேல் விழுந்து விட்டால் யார் மேல் குற்றம்? ஏன் தெரிந்து ஒதுங்கவில்லை என்று கேட்கிற லக்ஷணம்தான். "அவர் சம்பாதனையும் குறைவில்லை. ஆனால் இரு வருடையதும் சேர்ந்தும் போதவில்லை.” எப்படிப் போறும்? சர்க்கார் கஜானாவைத் திறந்து