பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஐயா நம்பணும்னு சொல்ல நான் யார்? எனக்கு நடந்ததை நடந்தபடி ஐயாகிட்ட ஒப்படைக்கிறேன். ஆனால் ஒண்னு ஐயாவுக்குத் தெரியாமல் எனக்கு ஒண்ணும் தெரியாது. எனக்குக் கதை கட்டிப் பேசற அளவுக்குச் சாமர்த்தியம் கிடையாது. ஆனால் நெஞ்சில் வேருணிப் போனதையும் என்னால் களைய முடியாது-' நாடார் சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்தார். சங்கடம்: சங்கடம்!! - மேலே என்ன நடந்தது, சொல்லுங்க.' ! ஐயா கிணத்தடியில் தோற்றமா வந்து நின்னு குனிஞ்சு, தன் காலடியில், தரையில், ஒரு அடிசுத்தளவுக்கு ஒரு வட்டம் விரலால் கோடு எழுதி அதைச் சுட்டிக் காண்பிச்சுட்டு மறைஞ்சுட்டார்.' 'மறைஞ்சுட்டேனா?” - "ஆமாம், காத்தோடு கலந்துட்டீங்க. கண்ணைக் கசக்கிட்டுப் பார்த்தால் வட்டம் மட்டும் பளிச்சுன்னு தெரியுது. அந்த அளவுக்குள் தோண்டினதும், ஒரு அடி ஆழத்துலே ஒரு செப்புத் தகடு கிடைச்சுதுங்க. அதில் முக்கோணத்து நடுவில் தாமரையில் மகாலட்சுமி எளுதி பிருக்குது. எடுத்துப் போய், மாடத்துலே வளர்த்தின அன்னிலிருந்து சக்கரம் மாறிட்டுது. சென்னைக்கு எடுத்துப் போயிட்டேன். வியாபாரமா? தூள் பறக்குது. கறிகாய் கடையாயில்லே, ஏதோ மளிகைக் கடையாட்டம் கூட்டம். போட்டிக் கடை மூடிப்போச்சு. அடுத்த வருடம் மளிகைக் கடை வெச்சுட்டேன்.” 'நாடார்: ஒரு நிமிஷம் நீங்கள் யோசித்துப் பாருங்க, நீங்களே சொல்லுங்க. இதெல்லாம் நடக்கற காரியமா உங்களுக்கே தோணறதா?” நாடார் புன்னகை புரிந்தார். 'சாமி என்னைக் கேட்டு சோதிச்சுப் பாக்குது. நம்பினவங்களுக்கு நடராஜா, நம்பாதவங்களுக்கு யமராஜா, ஐயாவோ தருமராஜா! ஐயாவேதான் சொல்லணும்.'