பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

கல் சிரிக்கிறது


“அப்போ ஒரு நிமிஷம் நில்லுங்க. ஏன், உள்ளே வாங்களேன். திவ்யமா கிட்ட, நின்னு தரிசியுங்க. நான் அதுக்குள், இந்த அர்ச்சனையப் பண்ணிடறேன்.”


"நானும் அர்ச்சனை பண்ணிக்கறேங்க. தேங்காய் பழம், வெற்றிலை வாங்கி வந்துடறேனுங்க.”


'ரொம்ப விசேஷம். சுருக்க வாங்க. ஐயா, நீங்க கையிலே தீர்த்தம் வாங்கிக்கோங்க. கோத்தரம், பேர்?”


குருக்கள் அர்ச்சனை நாமாவளிகளை உருட்ட ஆரம்பித்தார்,


“ஒம் கமலாம்பிகே யெநம !”


"ஒம் சிவப்ரியே யெநம !’’


"ஒம்...”


கர்மம், நாலு நாமாவுக்கே தொண்டை கம்மிப் போயிடறது. கண்டம் சற்றே பேசினா, எனக்கு இருக்கறராக ஞானத்துக்கு அள்ளிடுவேன். ஆனால் ஆட்டுக்கு வாலை அளந்துதானே வெச்சிருக்கு !


முதல் தட்டலுக்கே 'பளார்' என்று தேங்காய் சரி பாதியில் பிளந்தது. 'பேஷ் இன்னிக்கு, நாளைக்குச் சட்னிக்கு ஏர்வைதான். இது சரியாயிருக்கு. வாங்கிண்டு வரேன்னு போனானே, அந்த மூடி குழந்தை வாய் மாதிரியிருந்தால்?'


“என்ன குருக்களே ஒரு மூடி?’’

"ஒரு மூடி குருக்களைச் சேர்ந்தது.”


“எங்க ஊர்லே - ’’


“அது உங்க ஊர்; இது இந்த ஊர். எங்கள் ஊர். இங்கே பழக்கம் இப்படி. அதான் என்னடா புது முகமாயிருக்கேன்னு பார்த்தேன். ப்ராம்மணனுக்கு ஒரு தேங்காய்