பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கல் சிரிக்கிறது

. நான் நேரில முதலாடடிக் கண்டப்போ, உண்மையிலேயே பயம். தெய்வத்தோட பேசத் தைரியம் வருமா? அடே! நீ கண்டது கனவு இல்லை; உண்மைதான்னு உணர்த்திக் காட்டற மாதிரி நேரிலேயே வந்திருக்கங்க. ஆனால் எந்த நிமிசம் காத்திலே கரைஞ்சு போயிடுவீங்களோன்னு: ஒரு அச்சம் கூடவே இருக்கத்தானிருக்கு. என்னவோ அவ்வளவு ஸ்ன்னமா உங்களைப் பார்த்தால் எனக்குத் தோணுது." 'நாடார், நல்லாப் பேசlங்க. உங்கள் பேச்சு நயத்துலே நீங்கள் சொல்றதையெல்லாம் நம்பிடுவேன்.' 'ஐயா, எனக்கு நல்லாப் பேச வராது. நாக்கு தடிப்பு.’ தருமராஜன் பெருமூச்செறிந்தார். அவருக்கு அசதி கண்டு விட்டது. 'எனக்குத் தெரிஞ்சது, இல்லை, எனக்குத் தோணுது ஒண்னு சொல்றேனுங்க. ஐயாவுக்குத் தெரியாமலேயே, ஐயாகிட்ட அருள் தங்கியிருக்கு.' நாடாருக்கு வாயடைத்து விட்டது. ஒரு கும்பிடு போட்டு விட்டுக் கீழே இறங்கி விட்டார். வெகு நாழிகை இருப்புக் கொள்ளவில்லை. அலாவுதீனின் அற்புத தீபம், விக்ரமாதித்தனின் கூடு விட்டுக் கூடு பாயும் கதை, அராபியன் நைட்ல பறக்கும். குதிரை, பறக்கும் ஜமக்காளம்-கட்டுக் கதையோ கண் கூடோ அது அது அந்தந்தக் காலத்தோடு நின்னுடனும். காலம் மாறி வந்தால் அடாது. முதுகெலும்பில் ஒரு முள் எலும்பு கூட முளைச்ச மாதிரி வேதனை தவிர என்ன மிச்சம்? திடீரென்று ஒரு அர்த்தங் செட்ட, வயது கெட்ட, மானங்கெட்ட சபலம் அடித்துக்கொண்டது. (சபலத்துக்கு வயது உண்டா என்ன?) நாடார், நீர் என்னால் அடைஞ்