பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

கல் சிரிக்கிறது


கொடுத்தாலும், இன்று இல்லா விட்டால், நாளைக்கு இன்னொரு இடத்தில் வைக்கப் போகிறாள். அவர்கள் நிலைமை அப்படி அவளை அவன் உருப்பட விடப் போவதில்லை. அவனும் உருப்படப் டோவதில்லை. இந்தத் தேறாத கேஸ்ை வெச்சுண்டு என்ன செய்யலாம்? ஆனால் நகைகள் அந்தக் காலத்து நகைகள். மூழ்கிப் போனாலும் சரி, புதுசாப் பண்ணினாலும் சரி-அது போல் வராது, நகைகளின் விவரங்களைக் கூட நான் தெரிஞ்சு வெச்சுக்கல்லே. வெட்கக் கேடு. தெரிஞ்சு வெச்சுண்டு என்ன செய்யப் போறே? கட்டிலில் படுக்கையை விரித்தே படுத்தார். நேற்று சரியான நடை. நேற்று சரியான துரக்கம். அதுவும் மெய் மறந்த துரக்கம். மறுபடியும் கிடைக்குமா? இப்போ கூட படுக்கை கதகதப்பு சுகமாய்த் தானிருக்கு. இவளால் ஆகவேண்டிய காரியம் என்ன? இவளுக்காக நான் ஏன் இவ்வளவு கவலைப்பட வேண்டும்? மிச்ச மிருக்கிற கொஞ்ச நாளை மீன் கொத்தி மாதிரி காலத்தைக் கழித்து விட்டுப் போகாமல்... சொல்வரை காட்டும் இரக்கம், இரக்கமில்லையா? செயல் பட்டால் தான் வீரமா? வீரம் பண்ணி யார் யாருக்கு நிரூபனை? எனக்கு நானேயா? இது அவசியமா? நான் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம்? நாடாரே, நல்ல ரீல் விட்டிரய்யா! காசில்லாமல் என்ன செய்ய முடியறது? 'ஐயா காத்திலே கரைஞ்சு போயிடுமோன்னு அஞ்சினேன்! ஐயோ, என்ன நகாசு! ஆனால் கோமதியும் அதுதானே சொன்னாள்நீங்கள் கரைஞ்சு போயிடுவேளோ'ன்னு.