பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

な)fr。ー。エ。 2 f மாதிரின்னா ஆயிடுத்து! இந்த மஹானுபாவன் எங்கிருந்து வந்தான்? மண்டகப்படிக்காரன் வருவதற்கு இன்னும் நேரம் நிறைய இருக்கு-மேல் துண்டால், தோளிலும், அக்குளிலும் படரும் வேர்வையை ஒற்றியபடி வெளியில் வந்து உட்கார்ந்து கொண்டார். "படவா உருவின கத்தி மாதிரி பளப்பளன்னு ஏதோ நெருப்பிலே குளிச்சு வந்த மாதிரி எப்படி யிருக்கான் பாரு! அவரைப் பார்க்கப் பார்க்க எரிச் சலாய் வந்தது. இவனுக்குன்னு நம் குடும்பத்துலேயே ஒவ்வாத ஒரு கலர், ஒரு உடல் வாகு. ஒழுங்காய் இவன் அப்பனுக்குப் பிறந்திருப்பானா, இல்லே...காலம் இப்பத் தான் கெட்டுக் கிடக்கா, குந்தி நாளிலிருந்தே நாசம் தான்! தேவ ரஹஸ்யத்தைப் போல ஊழல்-உவ்வே! 'என்ன மணி, ஏன் குமட்டறது?’’ மணிக்குப் பேச்சு எழவில்லை. 'என்ன மணி, உடம்பு சுகமில்லையா? தலையைப் பிடிச்சிண்டிருக்கையே!” என்னைப் பத்தி இவனுக்கென்ன கரிசனம் வேண்டி விருக்கு? வேஷதாரி! 'சாக்கடையில் ஸ்னானம் பண்ணிண்டிருக்கேன்.' ஷ'தலை வலியா, தலை யெழுத்தா தெரியல்லே, அப்படிக் கனக்கிறது.” 1 * * 'அனாவசியக் கவலைப்படாதே. என்னதான் செய் யறது? நீதான் என்னைச் சந்தேகப்படறே. உன் மேல் மனஸ்தாபப்பட எனக்கு என்ன இருக்கு? நீ விரோதம் கொண்டாடப் பார்த்தாலும், உன் உடம்பைப் பற்றி விசாரிக்க நான் கடமைப் பட்டிருக்கேன், உரிமை உண்டு.”