பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா.

77


இறைத்து, முன் அபிஷேகத்தின் சுவடுகள் அழிந்த பின், அடுத்த அபிஷேகம்-சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், தயிர், பால்-ஒவ்வொரு அபிஷேகத்துக்கும், உருவம் ஒரு புது பரிணாமத்தில் பிதுங்குவது போல், நெருங்கி வருவது போல், ஒரு பிரமை தட்டுகிறது. கர்ப்பக்ருஹத்துக்கு வெளியே, இரண்டு வரிசையாக நின்று கொண்டு, தரிசனம் பண்ணிக் கொண்டிருப்பவர் களை அந்த லான்னித்யம் கவ்விக் கொள்கிறது. கற்பூரச் சுடர், ஒங்காரத்தை எழுதி, அதனுள் அவளை அடைப்பது போல், தட்டில் வட்டமிடுகையில் அம்பாளின் மூக்குத்திஅப்பப்பா! மயிர் கூச்செறிகிறது. நான் கமலாம்பிகை. வருடக் கணக்கான நித்திரையிலிருந்து இன்று விழித் தெழுகிறேன். -தருமராஜன் தன்னை யிழந்தார். நெற்றியில் சிவப்புக் கல் கண் திறக்கிறது. என்ன ஜாஜ்வல்யமான புன்னகை! -தருமராஜன் நெற்றி முத்திடுகிறது. வேர்வை பாலல்ல. நெஞ்சில் ரத்த நாளங்கள் புடைத்துக் கொள்கின்றன. செம்பருத்தி பூத்தாற்போல், தர்மராஜன் முகம் குங்குமப் பிழம்பு. நினைவின் அலமாரியில் புற்றுப் பூத்திருந்த ஒரு ஸ்லோகம் தன் யோகம் கலைந்து, எழுந்து, சிறகு விரித்து, அவர் நெஞ்சை மிதித்துக் கொண்டு, அவர் குரலில் கூடு எடுத்து, கணிரென்று எழும்புகிறது. அம்பா ஸாம்பவி சந்தரமெளலி ரபலா பரணன் உமா பார்வதி