பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翁)fr。 F。女rfr。 岔露 'அப்படியில்லே சார் - அம்மா சொல்றதுலே நியாய மிருக்கு. நைவேத்யம், அபிஷேகம், அலங்காரம் எல்லாம் புதுசா ஏற்பாடு பண்ணணும்.' 'பண்ணுங்க! அதென்ன சாமி, எல்லாம் காசு தானே! எவ்வளவு வேணும்; இந்தாங்க, போதுமா, போதுமா?" மூணு, நாலு ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்கள். மொடமொடவென்று புது நோட்டுக்கள். நிமிஷமாய்க் கையில் திணித்தாயிற்று. செலவைப் பத்திப் பேச்சில்லே முதலாளி -ஏறதோ தாழறதோ. உங்கள் நன்மைக்கு நீங்கள்தான் கொடுக்கப் போlங்க- அம்மா நேரத்தைப் பத்திப் பேசறாங்க, ' 'நேரமென்ன நேரம் தேங்காயை முன்னாலே உடைச்சுடுங்க கற்பூரத்தை முன்னால் கொளுத்திடுங்க." பேஷ்! எனக்கே புதுசா யோசனை சொல்வித்தரானே: சமயத்துக்கு இப்படியும் செய்யலாம் போல இருக்கே! 'அதுக்கில்லே ஸார் - ஹைன்ரநாமம்னா அதுக்குத் தனி சாந்தி, உபசாரம் எல்லாம் பண்ணியாகணும்; நாளைக்குச் சாவகாசமா, சிரத்தையா வெச்சுப்போமே!’ ""நாளைக்கா? அவன் ஒரு சிரிப்புச் சிரித்தான். கைக் கடியாரத்தைப் பார்த்துக் கொண்டான். "நாளை காலை ஏழு மணிக்கு ப்ளேன்-' அடிப் பாவீ! ஒரு கையால் கொடுத்து, ஒரு கையால் பிடுங்கிக்காதேடி: 'அப்போ ஒண்னு செய்வோம். உங்கள் அட்ரெஸ் ஸைக் கொடுத்துட்டுப் போங்கோ. இன்னி ராத்ரி எத் தனை நாழியானாலும் நானே நேரில்வந்து ப்ரசாதத்தைக் கொடுத்துடறேனே!' க. சி.-6