பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

கல் சிரிக்கிறது


அம்பாளே எதிர் நோக்கி வந்து விட்டளாா? அதே பச்சைப் புடவை, அச்சுக் கடைந்த உடலில். அவர் அம்மன் பக்கத்தில் நிற்கையில் அவளுடைய அலங்கார ஒளி அவர் மேல் பட்டு ஏற்கனவே செழிப்பான உடல் வண்ணத்தில், ரோஜா திட்டுப் படர்ந்து செம்பொன்னாய் உள்ளே பற்றிக் கொண்டாற் போல், தகதகத்தார். கோவில் மதில் ஏப்பம் விட்டாற் போன்று ஒரு குமுறல். 'மணி, தட்டை வாங்கிக்கோ-' மணிக்குப் புரியவில்லை. அவர் நேரே த்வஜ ஸ்தம்பத்தைத் தாண்டி நடந்து, அங்கு தெரு விளக்கடியில்-அங்கே அரைகுறை உருவில் ஒரு பாறாங்கல் கிடந்தது - ஆரம்பித்து, முடிக்காது கல் தச்சன் விட்ட வேலை - அதன் மேல் உட்கார்ந்து விட்டார். காற்று நெற்றியை ஒற்றியது. மயக்கம் வெடுக்கென விட்டு விட்டது; கமலாம்பிகை அடியில். அதுவும் எப்படி அடிக்கிறாள், கொஞ்சமும் எதிர்பாரா சமயத்தில். ஊமையடி ஸ்பெஷலிஸ்ட். அந்த ஒரு அடியில், ஒரே அடியில், பழைய புண்கள் அத்தனை யும் வாய் திறந்து கொள்கின்றன. உன்னிடம் ஆறுதல், எனக்கு வழி காட்ட ஒரு சைகை தேடி வந்தேன். இதுதான் நீ காட்டும் வழியா? மூவரும் அருகே வந்து நின்றனர். ராஜசேகரன் விஷயம் புரியாமல், ஆனால் அசடு வழிந்து கொண்டு பரிதாபகரமாக நின்றான். இந்த ஆள் யார்? இவங்க ரெண்டு பேரும் இப்படி அஞ்சறாங்களே! அவள் அவனை முழங்கையால் இடித்து அப்பால் விலகும்படி அவசரமாக ஜாடை காட்டினாள். புரிந்து கொள்ளவே அவனுக்குச் சற்று நேரம் பிடித்தது. 'அப்பா செளக்யமாக இருக்கேளா?' வரண்டு