பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

கல் சிரிக்கிறது

சது வீட்டில் இருக்கறதையும் சேர்த்துப் போட்டு செஞ்ச வரைக்கும் நிறக்க இருக்கணும். தட்சிணை அஞ்சுக்கு மேலே உங்களிஷடம். நான் கசக்கிப் பிழிய மாட்டேன் இன்னிக்கு அவள் அளந்த படி இவ்வளவுதான்னு திருப்திப் பட்டுடுவேன். சுபாவம் அப்படி. பனமாவே தந்துடறேளா? இப்போ முப்பத்தஞ்சு கொடுங்கோ. அர்ச்சனை தட்சினை தனி நினைவிருக்கட்டும். சரி, வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஆறு மணிக்கு 'டாண்’னு ரெடி.”


ஒரு வழியா ஆளெல்லாம் போயாச்சு. குருக்கள் நோட்டை மடித்து இடுப்பில் செருகிக் கொண்டார். சன்னதி மின்சார விளக்கைக்கூட அனைத்தாகி விட்டது. கதவைப் பூட்டிண்டு கிளம்ப வேண்டியதுதான்.


கர்ப்பக்ருஹத்தில் மட்டும் அகல் சுடர் எரிந்தது. எரியட்டும் - எரியறவரை,


“ஒரு கற்பூர் ஆரத்தி மட்டும் செளகர்யப் படுமா?’’


குருக்கள் திடுக்கிட்டுத் திரும்பினார். உருவத்தின் மங்கல் மட்டும் தெரிந்தது.


"கற்பூரம் கொண்டு வந்திருக்கேளா?”

“இல்லையே கடை மூடிக்கிடக்கு."

"பரவாயில்லே. தனியா ஒரு கால் ரூபா போட்டுடுங்கோ.”


தீபாராதனையின் வட்டமான பிரயாணத்தில் அம்பாளின் மூக்குத்தி மின்னிற்று. 'புன்னகையில் தனிக் கேலி தெரியறதோ? சிரிடீ சிரி ! உனக்கு எப்பவும் சிரிப்புத் தானே !' தட்டில் சுளையாக ஒரு வெள்ளி வட்டம் விழுந்தது. பெரிய வட்டம். 'இன்னிக்கு இத்தனை நாழிக்கு நரி முழி?' அந்தக் கேள்வியில்தான் குருக்கள் ஆளைச் சரி யாகத் தலை நிமிர்ந்து பார்த்தார்.

குங்கும ப்ரஸாதம் நெற்றியில் ஏறியதும், அந்த