பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

கல் சிரிக்கிறது

. வயதுதானிருக்கும். அந்தச் சிட்டுருவத்தில் ஓரிரண்டு வயது குறைத்துக் காட்டிற்றோ என்னவோ? எதிரே சோபாவைக் காட்டினான். சமையல் செய்ய, பேப்பரில் விளம்பரம்...' "ஆமாம், ஆள் எங்கே?' அவன் குரலில் ஆவல் தெரிந்தது, உச்சரிப்பு கொச்சைதான். வேற்று பாஷை . ஆனால் தமிழ் அவனுக்குப் பழகின பாஷை தான். "நான் தான் ஆள். வேலை கேட்க வந்திருக்கிறேன். : "மிஸ்டர் நீங்கள் வேடிக்கை பண்றிங்க. எனக்கு மதராஸி ஜோக்குகள் ரொம்பப் புரியாது.” பிடிக்காது? என்று வந்ததைக் கடைசி சமயத்தில் அப்படித் திருத்திக் கொண்டது தெரிந்தது. 'இல்லே சேட், மெய்யாத்தான். நான்தான் வேலைக்கு வந்திருக்கேன் .' அவன் முகம் சுளித்தது. "நோ நோ.' வாளா விருந்தார். 'நீங்கள் பம்மன் தானே-ப்ராம்மன்?’’ "ஆமாம்.' 'நான், நான்-விஜ்...” "அது எனக்குச் செய்யத்தெரியாது. சாப்பிடவும் தெரி யாது.” அவன் சிரித்துவிட்டு, 'உட்காருங்கள்,' என்றான். இல்லை சேட், நான் வேலைக்காரன் முறையில் வேலை கேட்க வந்திருக்கிறேன்.' பரவாயில்லை. உட்காருங்கள். நல்லாயிருக்கீங்க. நீங்கள் ஜென்டில்மேன்.' 'ஒரு நாள், நல்லா வாழ்ந்தோம். சினேகிதர்களுக்குக்