பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

கல் சிரிக்கிறது

. ஒண்னு ரெண்டு இருக்கிறதையும், அம்பாளின் ஆபரணங். களையும் ராவோடு ராவா தர்மகர்த்தா எடுத்துண்டு போயிடுவார். இன்னிக்கு சனிக்கிழமை. அவரிடம் வாங்க வும் வேண்டாம். கொடுக்கவும் வேண்டாம். அம்மனின் சிக்குப் பாவாடையை உருவிண்டு போறவன் போகட்டும். அவள் அம்மணமா நிக்கட்டும்.' மணி சிரித்தார். அவரவர் வேடிக்கை யுணர்வு அவ ரவர்க்குத் தனி. "ஆமாம், நைவேத்யத்துக்கு என்ன ஏற்பாடு பண்ணியிருக்கே கட்டளைக்குக் கச்சை கட்டிண்டு வந் துட்டியே!” சரியான, மூக்கை உடைக்கிற கேள்வி. இதுவரை அது பற்றி யோசிக்கவேயில்லை. ரூம்லேயே பொங்கிக் கொண்டு வர வேண்டியதுதானா? 'மணி, ஒரு சஹாயம். நான் காயமா ஏற்பாடு பண்ணிக்கற வரைக்கும் நைவேத்யம் உன் வீட்டிலிருந்தே தயவு பண்ணு. பெண்ணிடம் கொடுத்தனுப்பு. செலவு என்னுடையதாயிருக்கட்டும். அப்புறம் மணி, காலை பூஜை நீயே பண்ணு. ராத்திரி மட்டும் எனக்கு விட்டுக் கொடுத்தால் போதும்.' மணி ஏளனமாகப் புன்னகை புரிந்தார். என்னவோ மாதிரிதான் இருக்கு. என்ன பண்றது? சிரித்து விட்டுப் போகட்டும். இரவு 7-30-8 இருக்கும். மொட்டைமாடியில் இரண்டு கோணங்களிலிருந்து இரண்டு இருநூறு வாட்டுகள் இரவைப் பகலாக்கின. கைப்பிடிச் சுவர்களின் மேல் வரிசையாகத் தொட்டிகளில் க்ரோட்டன்ஸ், பூச்செடிகள், ஃபேன்ஸி கத்தாழைகள். ஒரமாய், குளிருக்கும் வெய்யிலுக் கும் அடக்கமாக இறக்கிய தாழ்வாரத்தில் மேசையில் சேட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.