பக்கம்:களத்தில் கருணாநிதி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 திராவிட சமுதாயம் என்பதே இல்லையா ? திரா விட மொழிகள் என்று வரலாறு தரும் சான்றைத் தெரியாதவர்களா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பவர்களா, கம்யூனிஸ்டுகள் ? திராவிடர்--ஆரியர்; திராவிடக் கலாச்சாரம் ஆரியக் கலாச்சாரம் வேறு வேறு என்பவற்றைப் பற்றி, வரலாற்றுச் சான்றுகள் தந்தோம், பல ஆண்களாக. பழக்க வழக்கங்கள்; மக்கட் பண்பு விளக்கங்கள், இத்தனையும் எடுத்துரைத்தோம். எங்கள் இனம் வாழ, விழிப்புற்று எழுச்சிபெற திராவிட சமுதாய அமைப்பு மீண்டும் புத்துணர்ச்சி பெற, 'திராவிடநாடு' தேவை என்பதை ஆயிரமாயி ரம் மேடைகளிலே கூறிவந்திருக்கிறோம். பாக்கிஸ்தானத்தை, மதத்தை அடிப்படை யாகக் கொண்ட ஒரு மக்களை, ஒரு இனமாக மதித்த, கம்யூனிஸ்டுகள், மொழியால், வழியால், வரலாற்றல், இனத்தால் ஒன்றுபட்டுள்ள, திராவிடரை, திராவிட இனத்தை, திராவிட நாட்டை, (ஆந்திர, தமிழ், கேரள, கன்னடம் சேர்ந்த) மறுக்கவோ, மறைத் கவோ முடியுமா? முடியாது! திராவிடர் தனி இனமாக வாழ்ந்தவர்கள். இடையே, சூது, சூழ்ச்சி, சமயம், சன்மார்க்கம் என்ற பலப்பல போர்வையால் மயக்கப்பட்டு, மன வளம் இழந்தவர்கள். ற