பக்கம்:களத்தில் கருணாநிதி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 ஆம்! குன்றத்தூரிலே, குண்டுவீச்சு, துப்பாக் கிக்குண்டுகள் பறந்தன மக்களை நோக்கி. ஒரு சிறு கணம், தப்பியிருந்தால் தோழர் என். வி. நடராசன், குண்டுக்கு, துப்பாக்கிக்கு இரை யாகிச் செத்திருப்பார்? எட்டு முறை துப்பாக்கிப் பிரயோகம்! எட்டு ரவுண்டுகள் சுட்டனர், மக்களைப் பார்த்து, குன்றத் தூரிலே. சிலர் இறந்தனர். நடராசன் தப்பினார், குறி தவறியதால் ? இது தியாகமல்லவா? செத்தால் தான் தியாகமா? பேச்சுரிமை பறிக்கப்பட்டது, குன்றத்தூரில்; பேச அனுமதி மறுத்து 144தடையுத்தரவு. அதைத் தோழர் நடராசன் மீறினார்! பேச்சை நிறுத்த, கூடியிருந்த பல்லாயிரவரைக் கலைக்கக் கொடுமை! கொடுமை! எட்டு ரவுண்டுகள் சுட்டனர் ; தடியடிதர்பார் நடத்தினர். இது கண்டு கலங்கினோமா? இல்லை. குன்றத்தூரில் தடையை மீறிய தோழர்கள் மீது வழக்கும் தொடர்ந்தனர் இதெல்லாம் தியாக மல்லவா? செத்தால்தான் தியாகமா ? ? சாவின் முனையில் வாயிலில் நின்று போராடும் துணிவு, பண்பு தியாகமில்லையா? சாவை, அழிவை, அடக்குமுறையை, வலிய, தானே சென்று அணைத்துக்கொண்டு ' தியாகம் பாரீர்: என்று பாடிடவேண்டுமா? அதுதான் தியாகமா? தியாகப்பட்டியல் தேவையா, இன்னும்? 5