பக்கம்:களத்துமேடு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

103


டைப்பும் மயக்கமும் வந்திச்சுது!... என்னோட மயக்கம் தெளிஞ்சதுமே, உங்கிட்டே இந்த நடப்பு சகலத்தையும் வெள்ளையாய்ச் சொல்லிடப்புடத்தான் துடிச்சேன். அதை நெனைச்சுத்தான், 'ஆத்தா அல்லாத்துக்கும் பாதை தொறந்து காட்டிப்புட்டா'ன்னு பேச்சைத் தொடங்கினேன். இதை ஒட்டியே தான், 'இனிமே ஒன்னை அந்தச் செலட்டூர் மாப்புள்ளை கட்டிக்கிறதுக்கு ஒரு தவசலும் தடையும் சொல்லமாட்டாகன்னும்! பூடகமாச் சொன்னேன்!...." என்று பேசினார் சேர்வை.

இடையிட்டுப் பேச இப்போது தான் அவளுக்கு வாய்ப்புக் கிட்டியது. "அப்படீங்களா, அப்பா?... அந்தப் பொம்பளை காலம் முடிஞ்சா போச்சு?..." என்றாள். நா தழுதழுத்தது.

"ஆமா, ஆத்தா!

மகளின் சண்ணீர் அவருக்கு ஆறுதலை அளித்தது போலும்!

"அப்பா!..." என்று கூப்பிட்டாள் தைலி.

"சொல்லு, ஆத்தா!"

"உங்க செல்லாயி கதை முடிஞ்சுப்புட்டாலும், அந்த நடப்பு நம்ம குடும்பத்துக்கு ஒரு ஒச்சம்னுகாட்டி, நம்ம சம்பந்தத்தை சிலட்டூர் மச்சான் முறிச்சிக்கிட மாட்டாக என்கிறது என்ன நிச்சயம்? இதுக்கு மாத்திரம் எனக்கு வகை சொல்லிப் புடுங்க, போதும்! இனிமே, இது பத்தி ஒரு வாக்கிணையும் பேசலை, நான்!.." என்று தெரிவித்தாள் குமரிப்பெண்.

சேர்வை நிமிர்ந்து உட்கார்ந்தார்; குடுமி அவிழ்ந்து கிடந்தது. ஒன் தலையெழுத்து எப்படிப் போட்டிருக்குதோ, அப்பிடித்தான் எதுவும் நடக்கும்!... இப்ப என்ன பரிசமா போட்டிருக்குது?... அப்பிடியே பரிசம் போட்டிருந்தாக்கூட,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/110&oldid=1386049" இலிருந்து மீள்விக்கப்பட்டது